மின் உற்பத்திக்கான சோதனை முயற்சி


ஈரோடு: சோழசிராமணி கதவணை நீர்மின்திட்ட, சோதனை முயற்சிக்காக மின் உற்பத்தி பணி மேற்கொண்டிருந்தபோது, தவறுதலாக மிஷினை இயக்கியதால், ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பலியானார்.நாமக்கல் மாவட்டம், சோழசிராமணி - பாசூர் இணைக்கும் காவிரி ஆற்றில், பவானி கட்டளை எண் 3ல், எலக்ட்ரிக்கல் டைனமோ மூலமாக மின் உற்பத்திக்கான சோதனை முயற்சி செய்து வருகின்றனர். இதில் நேற்று காலை, 10 மணியளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது மின் உற்பத்திக்காக இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. பராமரிப்பு பணி மேற்கொண்டிருந்தபோது தவறுதலாக ஒருவர் மிஷினை இயக்கினார். அப்போது மேட்டூர் தாலுகா, மேச்சேரி அருகே காவேரிபுரத்தானூரை சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் ரமேஷ், 28 என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இவருடன் வேலை செய்து கொண்டிருந்த இருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.


பலத்த காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த மற்ற இருவர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜேடார்பாளையம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரிக்கிறார்.
ஜேடார்பாளையம் போலீஸார் கூறுகையில், "மின் உற்பத்திக்காக சோதனை பணி மேற்கொண்டிருந்த போது தவறுதலாக ஸ்வீட்சை ஆன் செய்துள்ளனர். இதனால், ரமேஷ் என்பவர் பலத்த காயத்துடன் பலியானார். இதுசம்பந்தமாக மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் இருந்து அதிகாரிகள் ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் கழித்து செயற்பொறியாளர் தங்கவேல் என்பவர் புகார் எழுதி வந்தார். நாங்கள் நேரில் விசாரித்த பின் புகாரை பெற்றுக்கொள்கிறோம் என கூறியுள்ளோம். சம்பந்தப்பட்ட இடத்துக்கு விசாரணை மேற்கொள்ள எஸ்.ஐ., மணி என்பவர் சென்றுள்ளார்' என்றனர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click