25 ஆண்டு பணியாற்றிய அரசு ஊழியர் கணக்கெடுப்பு: 6 மாதங்களுக்கு ஒருமுறை சேகரிக்கப்படும்- தமிழக அரசு


அரசுப் பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்றமுறையில் பணியை முடித்த ஊழியர்கள் குறித்த
முறையில் 25 ஆண்டுகள் பணியை முடித்த அரசு ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே
அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அரசுப் பணிகளில் 25 ஆண்டுகள் சிறப்பான முறையில் எந்தவித களங்கமும் இல்லாமல் பணியாற்றியபவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள இந்திரா விகாஸ் பத்திரம் வழங்கப்பட்டு வந்தது.பின்னர்,

இந்திரா விகாஸ் பத்திரம் என்பது கிசான் விகாஸ் பத்திரமாக மாற்றப்பட்டது.இந்த கிசான் விகாஸ் பத்திரம்வழங்குவதை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதியுடன் மத்திய அரசு நிறுத்தி விட்டது.இதையடுத்து, 25ஆண்டுகள் பணியை முடித்த தமிழக அரசு ஊழியர்களுககு வழங்கப்படும் பத்திரமும்கேள்விக்குறியானது.முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு:
இதையடுத்து, இந்தத் திட்டத்தைப்புதுப்பித்து சட்டப்பேரவையில் கடந்த மாதம் அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.அதன்படி, ரூ.500 என்பதை ரூ.2 ஆயிரம்ரொக்கமாக வழங்கவும்,அதனுடன் சான்றிதழும்அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா
அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அதற்கான உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

அப்பழுக்கற்ற முறையில் 25 ஆண்டுகள் பணியை முடித்த அரசு ஊழியர்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை எடுக்கப்படும்.அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இந்தபட்டியல் தயாரிக்கப்படும். தகுதியானவர்களுக்குரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும்.மேலும், உள்ளாட்சிஅமைப்புகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியைமேற்கொள்வோருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.இதனிடையே,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் 25ஆண்டுகளுக்கு மேலாக பணியை முடித்தோருக்கும்ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிதித் துறையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன.அதன்படி, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக நிதித்துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறைசேகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments: