அவசரமாக மின்சார திட்டத்தை நிறைவேற்ற உரிமையாளரிடம் விசாரணை நடத்தாமலேயே நில ஆர்ஜிதம் செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு


தமிழ்நாட்டில் அவசரமாக மின்சார திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தாமலேயே அரசு நில ஆர்ஜிதம் செய்யலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 ஏக்கர் நிலம்
தர்மபுரி மாவட்டம் அதகபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்மோகன். இவருக்கு சோமனஹள்ளி, பங்குநத்தம் ஆகிய கிராமங்களில் 30 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு துணை மின்நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.எனவே இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மதன்மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.தனபாலன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மின் தட்டுப்பாட்டை போக்க
மனுதாரருக்கு நிறைய நிலம் உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவர் ஏழை இல்லை. அவருக்கு சொந்தமான நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்கு அரசு முன்வந்துள்ளது.இந்த ஆர்ஜித நடவடிக்கைகளுக்கு முன் தன்னை நில ஆர்ஜித சட்டத்தின் 5ஏ பிரிவின்படி விசாரிக்கவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு உள்ளது. அதைப் போக்கும் நடவடிக்கையாக சில அவசர நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
விசாரணை தேவையில்லை
பொது நலனை கருதியோ, அவசரகால திட்டங்களுக்காகவோ நில ஆர்ஜிதம் செய்வதற்கு நில ஆர்ஜித சட்டத்தின் அவசரப் பிரிவை பயன்படுத்த முடியும். அதன் அடிப்படையில் நில உரிமையாளரிடம் 5ஏ பிரிவின்படி விசாரணை நடத்த தேவையில்லை.மனுதாரரின் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் அவரது ஆட்சேபனையை அரசு கேட்டுள்ளது. எனவே அவசரப்பிரிவை அரசு பயன்படுத்தியதில் தவறில்லை. இந்த அவசரப்பிரிவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 comment:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click