வட சென்னை புதிய அனல் மின் நிலைய கட்டுமான பணிக்கான, 'டெண்டரை'
மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 'வட சென்னை மூன்று' என்ற பெயரில், 800 மெகாவாட் திறனுடைய, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மின் வாரிய இணையதளங்கள் வாயிலாக, டெண்டர் படிவத்தை ஆக., 21ம் தேதி வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தை சமர்ப்பிக்க செப்., 30 கடைசி நாள். எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், 1,600 மெகாவாட் திறனுடைய, அனல் மின் நிலைய பணிக்கான, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, கடந்த மாதம், டெண்டர் கோரப்பட்டது. தற்போது, 4,800 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள, வட சென்னை புதிய மின் நிலையத்திற்கு, டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மின் நிலையங்களின் பணிகளை, 2016 ஜனவரியில் துவக்கி, 2019ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மின் வாரியத்திற்கு, வட சென்னையில், அனல் மின் நிலையம் ஏற்கனவே உள்ளது. அதே வளாகத்தில் தான், புதிய மின் நிலையம் கட்டப்பட உள்ளது
http://www.dinamalar.com/news_detail.asp?id=1295357
No comments:
Post a Comment