தொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்பு பயில ஆசையா? விண்ணப்பம் செய்ய காலக்கெடு நீட்டிப்பு



சென்னை: தொழிலாளர் சட்டங்கள்-நிர்வாகவியல் படிப்புகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தொழிலாளர் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்வி நிலையத்தின் சார்பில் ஓராண்டு பகுதி நேர முதுநிலை பட்டயப் படிப்பு, தொழிலாளர் சட்டங்களும்-நிர்வாகவியல் சட்டமும் குறித்த ஓராண்டு வார இறுதி பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்துள்ளது. ஆனாலும், விண்ணப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததால், பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 15 (பகுதி நேர படிப்பு) மற்றும் 31 (வார இறுதி படிப்பு) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களைப் பெற்று குறிப்பிட்ட காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.200. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணச் சலுகை பெற, ஜாதி சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும். தபாலில் விண்ணப்பங்கள் பெற விரும்புவோர் ரூ.250-க்கான வங்கி வரைவோலையை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai-5 என்ற பெயருக்கு எடுத்து அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர்கள் எஸ்.ராமமூர்த்தி (9655413990), டி.குமரன் (9443109566) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்-5, காமராஜர் சாலை, சென்னை-600 005 என்ற முகவரியிலும், 044-28440102, 28445778 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.




No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click