இலவச விவசாய மின் இணைப்பு: விவசாயிகளுக்கு அழைப்பு

ஈரோடு : இலவச விவசாய மின் இணைப்பு பெற, ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்போர், மீண்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மின் வாரிய செயற்பொறியாளர் சின்னுசாமி கூறியதாவது:கடந்த, 1990 ஜன., முதல், 2000ம் ஆண்டு மார்ச் வரை பதிவு செய்யப்பட்ட விவசாய விண்ணப்பங்களுக்கு, இரண்டு லட்சம் பம்ப் செட் என்ற அடிப்படையில், இலவச விவசாய மின் இணைப்பு வழங்க, 2010 நவ., மாதம் தயார் நிலை கடிதங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தில், மின் இணைப்பு பெற இயலாதவர்களுக்கு, 2011ம் ஆண்டு அக்., 28ம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு, சாதாரண வரிசையில் தயார் நிலை அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டன.விண்ணப்பித்தவர்களில் சிலர் இறந்து விட்டதாகவும், சிலர் வெளியூர் சென்று விட்டதாகவும் மற்றும் இதர காரணங்களாலும், இரு தயார் நிலை அறிவிப்பு கடிதங்களை பெற முடியவில்லை. தயார் நிலை கடிதங்களின், ஐந்து ஆண்டு கால அவகாசம் ஜனவரியில் முடிவடைகிறது.தயார் நிலை கடிதம் கிடைக்க பெறாத விவசாய விண்ணப்பதாரர்கள், அதற்கான அத்தாட்சியுடன், விண்ணப்பதாரர்கள் இறந்திருந்தால் வாரிசு தாரர்கள், அதற்கான ஆவணங்களுடன் மின் வாரிய தெற்கு கோட்ட பகுதிக்கு உட்பட்ட முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல் பூந்துறை, மொடக்குறிச்சி, எழுமாத்தூர், எல்லக்கடை, சிவகிரி, அரச்சலூர், வடுகபட்டி, கஸ்தூரிபா கிராமம், கந்தசாமி பாளையம், முகாசி அனுமன்பள்ளி, கணபதி பாளையம், தாமரைப்பாளையம் மற்றும் கொடுமுடியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட மின் வாரிய பிரிவு அலுவலங்களை உடனடியாக தொடர்பு கொண்டு வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click