தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். தினமலர் நாளிதழில் வெளியான செய்தி

தினமலர் நாளிதழில் வெளியான செய்தி பதிவு நாள் 26.07.15
தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர்.தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணி
புரிகின்றனர்; 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வுஊழியர் பற்றாக்குறையால் மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாதம்தோறும், 500 - 750 ஊழியர் ஓய்வு பெறுவதால், 20 பேர் செய்யும் வேலையை, ஒரு ஊழியர் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிதாக உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் என, 7,500 ஊழியர்களை நியமிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க, கடந்த லோக்சபா தேர்தல் முடிந்த பின் புதிதாக, 5,000 ஊழியர் நியமிக்கப்பட இருந்தனர். ஆனால், அதன்பின், தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலால் நியமிக்கப் படவில்லை.முதல்வர்தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விரை வில் துவங்க உள்ளது.இதில், 110வது விதியின் கீழ், மின் வாரியத்தில், 7,500 ஊழியர் நியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click