மத்திய அரசு துறைகளில் 1000 இளநிலை பொறியாளர் பணி:எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1000 இளநிலை பொறியாளர் (குரூப் பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை பொறியாளர்
காலியிடங்கள்: 1000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி கணக்கிடப்படுகிறது.
தகுதி: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.4,200.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://ssconline.nic.in அல்லது http://ssconline2.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி I - 07.08.2015, பகுதி II - 10.08.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://vacancycollection.nic.in/ssc/notice/examnotice/final_Notice_JE_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click