பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் துணை பொறியாளர் பணி

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை : 30

பணி: Deputy Engineer - துணை பொறியாளர்

வயது வரம்பு: 01.03.2014 தேதியின்படி பொது பிரிவினர் 25-க்குள்ளும், ஓ.பி.சி பிரிவினர் 28-க்குள்ளும், SC/ ST பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication/ Communication/Telecommunication துறைகளில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.



சம்பளம். மாதம் ரூ.16,400 - 3 % - ரூ . 40,500 + இதர சலுகைகள்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி அதனுடன் டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து " Sr. DGM (HR&A(HR & A), முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com(http://bel-india.com/recruitment) என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2014

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click