மத்திய அரசு வழங்கும் டிஜி லாக்கர் சேவை




நவீன உலகில் காகித பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு, அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகளுக்கான காகிதச்சுமை குறைந்திருப்பதால் பொதுமக்களுக்கு இருந்த சிரமம் குறைந்துள்ளது. 

மத்திய அரசு வழங்கும் டிஜி லாக்கர் சேவை: ஆவணங்களை இனி கையில் எடுத்துச் செல்ல தேவையில்லை
அந்த வகையில் காகிதச்சுமையை மேலும் குறைக்கும் வகையில், டிஜி லாக்கர் என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜி லாக்கர் சேவையை பயன்படுத்தி, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை மக்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். முக்கியமாக அரசு தரும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இந்த டிஜி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.


இதற்காக ஒவ்வொருவரும் தங்கள் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்னர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் வரும். பிறகு கடவுச்சொல்லை பதிவு செய்து லாக்-இன் செய்துகொள்ளலாம். அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் ஆவணங்களை மென் நகலாக டிஜி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to malaimalar

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click