திருப்பூர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மின் இணைப்பு பெயர் மாற்ற இன்று மேளா துவங்குகிறது.

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் அறிக்கை:வீடு மற்றும் வணிக மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய, விண்ணப்பம், ரூ.80க்கான பிணை முறிவு பத்திரம், வீட்டு வரி ரசீது ஆகியவற்றையும், தொழிற்சாலை மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு, பெயர் மாற்ற விண்ணப்பம், ரூ.80க்கான பிணை முறிவு பத்திரம், ரூ.40க்கு ஒப்பந்த பத்திரம், பெயர் மாற்றம் செய்பவரின் பெயரில் சிறு, குறு தொழில் நிறுவன சான்று, மின் நுகர்வோர் இறந்திருந்தால், வாரிசு பெயரில் மாற்றம் செய்ய தேவையான, ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.இன்று, காங்கயம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், நாளை - பல்லடம், நாளை மறுதினம் - திருப்பூர், 20ல் அவிநாசி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் இம்மேளாவில் பங்கேற்று, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Promotion of Assessor to the post of Inspector of Assessmt

promotion of Assessor to the post of Inspector of Assessmt Assr to IA-panel   ALLOTMENT