ஒருவர் பெயரில் ஒரு மின் இணைப்பு: புதிய நடைமுறை அமல் ( தினமலர் செய்தி )

வேடசந்தூர்:புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளுக்கு, ஒருவர் பெயரில் ஒரு இணைப்பு மட்டுமே வழங்கப்படும் என மின்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர். இதுவரை ஒரு வீடு அல்லது வணிக வளாகத்திற்கு, ஒருவர் பெயரில் எத்தனை இணைப்புகள் வேண்டுமானாலும் கொடுக்கப்பட்டன.

இந்த நடைமுறையில், தற்போது பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இருந்து, ஒரு வீடு அல்லது ஒரு வணிகவளாகத்திற்கு ஒரு இணைப்பு மட்டுமே வழங்கவேண்டும். பல இணைப்புகள் தேவையெனில் உரிமையாளர், அவரது மனைவி, மகன், உறவினர்கள் பெயர்களில் தனித்தனியாக இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இதனால் புதிய வணிகவளாகம் கட்டுவோர், தங்கள் பெயரில் ஒரே இணைப்பு பெறுவதா, அல்லது மற்றவர்களின் பெயரில் இணைப்புகள் வாங்குவதா என குழப்பத்தில் உள்ளனர். ஒரு மின் இணைப்பு மட்டும் பெற்றால், வணிக வளாகங்களில் கட்டணம் கூடுதலாகிவிடும், இச்சூழலில் வாடகை தாரர்களிடம் மின் கட்டணத்தை பகிர்ந்து வசூல் செய்வதில் பிரச்னை ஏற்படும். வெவ்வேறு பெயர்களில் மின் இணைப்பு பெற்றாலும் என்றாவது பிரச்னை ஏற்படலாம் என்பதால், மனம் குமுறுகின்றனர்.

வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் காளிமுத்து கூறியதாவது: பிப்.,15 முதல் ஒரு கட்டடத்திற்கு ஒரு இணைப்பு தான் வழங்க வேண்டுமென அரசாணை வந்துள்ளது. கூடுதல் இணைப்பு தேவையெனில், மனைவி, மகன் என உறவினர்கள் பெயரில் பெறலாம், என்றார்.
ஏராளமான கடைகள் இருந்தால் என்ன செய்வது என்ற போது, "வாடகைக்கு இருப்பவர்களின் பெயரிலேயே ரூ.200 கூடுதலாக செலுத்தி இணைப்பு பெறலாம், அதனால் யாருக்கும் பிரச்னை இல்லை' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1205407
இச்செய்திபற்றிய  தகவல் எதுவும் மின்வாரிய தரப்பிலிருந்து எனக்கு கிடைக்க வில்லை  தினமலர் நாளிதலில் வெளியானதை பகிர்துள்ளேன்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click