மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம்

படம்: கோப்பு
படம்: கோப்பு
முறைகேடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஸ்மார்ட் ரிமோட் மீட்டர்களை பொருத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பைத் தடுக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 53,000 கோடி ரூபாய் கடனிலும், மின் தட்டுப்பாட்டிலும் தவிக்கும் தமிழக மின் வாரியம், மின்சார பயன்பாட்டு கட்டணத்தில் முறைகேடுகளைத் தடுக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக, ரேடியோ அலைக்கற்றை மூலம் செயல்படும், எல்.பி.ஆர்.எப்., எனப்படும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.இந்த மீட்டர்களை நுகர்வோரின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தினால், கணக்கெடுப்பாளர்கள், ஒரு இடத்தில் நின்று கொண்டு, நவீன ரேடியோ அலைக்கற்றை கையடக்க கருவி மூலம், ஒரே நேரத்தில் 60 மீட்டர் சுற்றளவில் உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் பதிவுகளை, ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும்.மீட்டர்களிலுள்ள மின் அளவுகள் அலைக்கற்றை மூலம், ஒரு சில நொடிகளில் கையடக்க கருவியில் பதிந்துவிடும். பின் அதனை கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த மீட்டர்கள், திருச்சி மாவட்டத்தில் சுமார் 150 இடங்களில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட சியான் நிறுவனம் இந்த மீட்டர்களை விநியோகம் செய்ய முன்வந்துள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click