ஒரே உறுப்பினர் கூட வழக்குகளை விசாரிக்கலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம்

ஒரேயொரு உறுப்பினர் கூட வழக்குகளை விசாரிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின் வாரியம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது, மின்சாரம் வாங்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர் பணியிடங்கள் உள்ளன. வழக்குகளை விசாரிப்பதற்கு குறைந்தபட்சம் 2 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இப்போது ஒரேயொரு உறுப்பினர் மட்டும் உள்ளார். தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வழக்குகளை விசாரிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக விதியைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு திருத்த விதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் (www.tnerc.gov.in) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் திருத்தம் தொடர்பாக, ஜனவரி 12-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 19-ஏ, ருக்மிணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click