இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...