அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு, மின்சாரம் திருடப்படுவது அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு பெட்டியிலிருந்தே, நேரடி யாக மின்சாரம் திருடுகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர்.
தமிழக மின் வாரியம், 45 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலும், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலும் தத்தளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், மின் கசிவு, மின்சார வினியோகத்தில் ஏற்படும் இழப்பு மற்றும் மின் திருட்டு போன்றவற்றால் ஆண்டுக்கு ரூ.900 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக, மின் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின் வாரியத்தின் சில ஊழியர்கள், சில அதிகாரிகள் உடந் தையுடன், தனியாரும், பல்வேறு அமைப்புகளும், ஒரு சில அரசியல் கட்சிகளும் மின்சாரம் திருடுவது அதிகரித்துள்ளது. மேலும் தற்காலிக மின் இணைப்புகள் தேவைப்படும் இடங்களிலும், சட்டவிரோதமாக மின் இணைப்பு பெட்டியிலிருந்து நேரடியாக மின்சாரம் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்வாறு திருடப்படும் மின்சாரம், எந்த மின் இணைப்பாளர் கணக்கி லும் சேராமல், அடையாளம் தெரியாத பயன்பாடு கணக்கில் வருவதாக உயரதிகாரிகள் கவலை யடைந்துள்ளனர். மின் மாற்றியில் பொருத்தப்படும், மீட்டர்கள் மூலம் மின் திருட்டு அளவை கணக்கிடுகின்றனர். ஆனால் யார், எப்போது திருடுகிறார்கள் என்பது அந்தந்த பகுதியில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் பொறி யாளர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதுகுறித்து, மின் திருட்டு தடுப்புப் படை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,’பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிற் கூடங்களில் திருடப்படும் மின்சாரத்தைக் கணக்கிட்டு அபராதம் விதிக்கிறோம். ஆனால், சாலைகளில் மின் இணைப்புப் பெட்டிகளின் மூலம் திருடப்படும் மின்சாரத்தை கணக்கிட முடியவில்லை. மேலும், புகார் அளிப்பதற்கு யாரும் முன்வராமல் இருப்பதால், பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது விழாக்களுக்கு மின்சாரம் திருடு வதை தடுக்கவோ, பிடிக்கவோ முடியவில்லை. அதற்குரிய மீட்டர்கள் பொருத்தாத தால், தொழில் நுட்ப ரீதியாகவும், சட்டரீதியாகவும் நிரூபிக்க முடியாத சூழல் உள்ளது,’என்றார்.
மின் திருட்டைத் தடுக்க, மின் வாரியத் தலைவர் ஞானதேசிகனின் நேரடி கட்டுப்பாட்டில் 14 தனிப்படைகள் கண்காணித்து வருகின்றன. மேலும், கண் காணிப்புத் துறை ஏ.டி.ஜி.பி., மேற்பார்வையில், ஒவ்வொரு மண்டலத்திலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் புகார் அடிப்படையில் தனிப்படையினர் மற்றும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் வரை, 1529 மின் திருட்டு வழக்குகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு, 75.78 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் அதிக பட்சமாக 377 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 31.64 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மின் திருட்டு பற்றிய புகார்களை 04428412906 எனும் மின் வாரிய தலைமையக தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment