திருப்பூர் : "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை துவங்கியது


திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், மின் கட்டணம், கடைசி தேதி குறித்த "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை நேற்று துவங்கியது. மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்து "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் மொபைல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மின் கோட்டத்திலுள்ள 2.30 லட்சம் மின் இணைப்புகளில், இதுவரை 1.40 லட்சம் பேர் மின் இணைப்பை பதிவு செய்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., சேவை நேற்று துவங்கியது. எஸ்.எம்.எஸ்.,ல், மின் இணைப்பு எண், ரீடிங், பயன்பாடு, மின் கட்டண தொகை, செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகியவை இருக்கும். திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுப்ரமணியம் கூறுகையில், ""மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., சேவை இன்று (நேற்று) துவங்கியது. இனி, கணக்கீட்டாளர்கள் ரீடிங் எடுத்தவுடன், எஸ்.எம்.எஸ்., உடனடியாக வரும். நடப்பு மாதத்தில் முன்னதாக எடுத்தவர்களுக்கு வராது; அடுத்த முறை ரீடிங் எடுத்த பிறகு வரும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், தங்கள் மொபைல்போன் எண்ணை பதிவு செய்யலாம். மின் இணைப்பு எண் ணுடன் கொடுக்கப்படும் மொபைல்போன் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும் தங்கள் மொபைல்போன் எண்ணை 
கொடுக்கலாம்,''  என்றார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click