2க்கும் மேல் மின் இணைப்பு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை:வருவாயைப் பெருக்க மின்வாரியம் அதிரடி ( தினமலர் )

ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேலும் மின் இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு பெறுவது வழக்கம். பெரிய கட்டடமாக இருந்தாலும், மாடி வீடாக இருந்தாலும் மற்றொரு மின் இணைப்பு பெற்று பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அதேப்போன்று வாடகைதாரர்கள் வசிக்கும் ஒரே வீட்டில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் கூட்டு குடியிருப்பு பகுதியில் அவரவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் உரிய தொகை செலுத்தி வருவதால் பயனாளிகளிடையே பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மொத்த தேவையான 12 ஆயிரம் மெகாவாட்டில் அதிகபட்சமாக 9,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.குறைவாக உள்ள 3,000 மெகாவாட் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், கிடைக்கின்ற மின்சாரத்தை வைத்து வருவாயைப் பெருக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின் உற்பத்திக் கட்டணம் உயர்ந்துள்ளதையொட்டி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டணம் ஒவ்வொரு சிலாப்புக்கும் மாறுபடுகிறது.இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் உபயோகிக்கும் வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் கட்டணமும், 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 1.50 எனவும், 500 யூனிட் வரை 3 ரூபாயாகவும், 500க்கு யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 5.75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு குறைந்தளவு மின்சாரம் உபயோகிப்பாளர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகை கட்டணத்தை தனித்தனி மின் இணைப்பு பெற்றவர்களும் குறைவான மின்சார கட்டணம் செலுத்த முடியும். இதனைத் தவிர்க்க ஒரு கட்டடத்தில் ஒரே உபயோகத்திற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்புகள் இருக்கக் கூடாது என மின்வாரியம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

இதனை அமல்படுத்தும் பொருட்டு கடலூரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுதோறும் சென்று 2 இணைப்புகள் உள்ளதா? அவ்வாறு இருந்தால் உடனே மின்வாரிய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும், வருகை தராதவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.முன்கூட்டியே நுகர்வோருக்கு எந்த அறிவிப்பும் செய்யாமல் திடுதிப்பென மின்வாரியம் எடுத்துள்ள முடிவால் உபயோகிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click