PFRDA'S PROPOSED OPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS

புதிய ஓய்வூதியம் சார்பாக அரசு வெளியிட்டுள்ள பரிந்துரைகளுக்கு, சந்தாதாரர்களின் கருத்து தெரிவிக்க உத்தரவு.

click here TO DOWNLOAD PFRDA - EXPOSURE DRAFT ON PROPOSEDOPERATIONAL WITHDRAWAL PROCESS FOR NPS SUBSCRIBERS 


தோழர்களே!


PFRDA 26/12/2013 அன்று புதிய ஓய்வூதிய தொழிலாளர்களின் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான தனது பரிந்துரையை தனது வலைதளத்தில் (pfrda.org.in) வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் 31/01/2014ஆம் தேதிக்குள் k.sumit@pfrda.org.in என்கின்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பும் படிஇதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:

அரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’

         தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.


          நலிந்து கிடந்த கோ-ஆப்டெக்ஸ் தயாரிப்புகளில் புதுமைகளை புகுத்தி, அந்த நிறுவனத்தை லாபப் பாதையில் பயணிக்க வைத்திருக்கும் சகாயம் ஐஏஎஸ், ‘வேட்டி தினம்’ கொண்டாட இருப்பதாக ஏற்கெனவே ‘தி இந்து’விடம் சொல்லி இருந்தார். அதன்படி, தைப் பொங்கலையொட்டி ஜனவரி 1 முதல் 14-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் சகாயம் கூறி இருப்பதாவது:

லஞ்ச ஒழிப்பு துறைக்குஅரசு ஊழியர்கள் சார்ந்த (Passport , Promotion Etc) குறிப்பிட்ட தகவல் சார்ந்து மட்டுமே தகவல் கோர அரசு கடிதம்

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்


தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்:  பேரவையில் 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மின் திருட்டு பற்றிய புகார்களை 04428412906 எனும் மின் வாரிய தலைமையக தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு, மின்சாரம் திருடப்படுவது அதிகரித்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு பெட்டியிலிருந்தே, நேரடி யாக மின்சாரம் திருடுகின்றனர் என பொதுமக்கள் புகார் தெரி விக்கின்றனர்.
தமிழக மின் வாரியம், 45 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்திலும், 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனிலும் தத்தளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், மின் கசிவு, மின்சார வினியோகத்தில் ஏற்படும் இழப்பு மற்றும் மின் திருட்டு போன்றவற்றால் ஆண்டுக்கு ரூ.900 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக, மின் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

ரூ.505 கோடியில் 50 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் தொடங்கி வைத்தார்.
 1/1 
சென்னை, டிச.31 - குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (சி.எப்எல்) வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதாநேற்று தொடங்கிவைத்தார்
புதுப்பிக்கத் தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்_அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்_ அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:_
முதல்வர் ஜெயலலிதா நேற்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி (யடுக்ஷடீச் இச்டூக்டீஙுடீடூஷடுடூகி) மூலமாகத் திறந்து வைத்தார்கள். மேலும், 505 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சரியசக்தி மின் உற்பத்தி  அமைப்பு ஆகியவற்றை திறந்து வைத்து, குடிசை மின் நுகர்வோர்களுக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (இஊக) வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். 
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்து, சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கிட புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது இன்றியமையாததாகும் என்பதை கருத்தில் கொண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா 25.4.2013 அன்று சட்டமன்றப் பேரவையில்  அறிவித்தார். 
அதன் அடிப்படையில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகவும்; 
505 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2  எண்ணிக்கையிலான 230 கி.வோ. துணை மின் நிலையங்கள், 29 எண்ணிக்கையிலான 110 கி.வோ. துணை மின் நிலையங்கள், 18 எண்ணிக்கையிலான 33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;  என மொத்தம் 509 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். 
சரிய ஒளியானது, மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புறச் சூழலுக்கு  மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்றதுமான எரிசக்தி ஆதாரம் கொண்டதாகும். சரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சரிய சக்திக் கொள்கை_2012 அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக சரியசக்தியிலிருந்து மின் உற்பத்திப்  பெருக்கத்திற்கு ஒரு புதிய பாதை வகுத்துள்ளார்.  
அதன்படி, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சரியசக்தி மின் உற்பத்தி மூலம், வருடத்திற்கு சுமார் 1 லட்சம் மின் யூனிட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். மேலும், இந்த சரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் மின்சாரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தின் தினசரி மின் தேவையின் ஒரு பகுதியினை ஈடுசெய்ய  பயன்படுவதோடு விடுமுறை தினங்களில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் மின்  கட்டமைப்பு  தொகுப்புடன் இணைக்கப்படும். 
பொது மக்களிடையே மின் சேமிப்பினை ஊக்குவிக்கும்  வகையிலும், திறன்மிக்க மின்விளக்குகளின் சந்தை விலையைக்  கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்களும் இத்தகைய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழகத்தில் உள்ள சுமார் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை மின் இணைப்பு  நுகர்வோர்களுக்கு விலையில்லா திறன்மிக்க சிறுகுழல் விளக்குகளை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்தது. 
அதன்படி, குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, முதற்கட்டமாக 7 லட்சம் குடிசை மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா 9 வாட் சிறு குழல் விளக்குகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா திறன் மிக்க  சிறுகுழல் விளக்குகளை வழங்கினார். இந்த திட்டத்தின் பயனாக மட்டுமே சுமார் 40 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க இயலும்.
மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில்,மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், எரிசக்தித் துறைச் செயலாளர் 
ராஜேஷ் லக்கானி,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஞானதேசிகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

G.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் குறித்த விதிமுறைகளை விளக்கும் அரசாணை.

– Junior Engineer/ Electrical II Grade – Promotion to the post of Junior Engineer/ Electrical I Grade – PAR's – called

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

From

Er. K. MUTHU, B.E.,
Chief Engineer/ Personnel (I/c.),
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
To

The All Superintending Engineers/ EDC/ Generation/GCC/ P&C/ Operation all The Chief Engineers/ Thermal Power Station and Projects and the all CE’s and SE’s of Head Quarters/ Chennai-2.

Letter No.102677/825/Adm. Branch/G4/S/2013-1, dated 23.12.2013.

Sir,

Sub :
TANGEDCO – Estt. – Class III Service – Junior Engineer/ Electrical II Grade – Promotion to the post of Junior Engineer/ Electrical I Grade – PAR's – called for – Regarding.

மரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சி.காசியம்மாள்.
இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது:– தற்காலிக பணியாளர் என் கணவர் சின்னப்பா, கிராம சமூக வனத்துறை ஊழியராக, தொகுப்பூதியம் பெற்று 25 ஆண்டுகளாக பணியாற்றினார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும்3,058 தற்காலிக ஊழியரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு 1999–ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனடிப்படையில், பணி மூப்பு பட்டியல்தயாரிக்கப்பட்டது. அதில், என் கணவரின் பெயர் 1002–வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பே, அதாவது 13–3–2007 அன்று இதயநோய் காரணமாக என் கணவர் இறந்துவிட்டார். வேலை வழங்க முடியாது இதையடுத்து என் மகனுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு தமிழக தலைமை வனப்பாதுகாவலர் மனு கொடுத்தேன். அவர் வேலை வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து, நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, வாரிசு வேலைக் கேட்டு கொடுத்த மனுவை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது.

Cable fault location, testing and route tracing services

The TANGEDCO is offering services of underground cable fault location, testing and route

tracing of cables owned by other agencies duly collecting the following charges:


 * For the cable route tracing along with the UG cable fault location / testing, Rs.5,500/- per route
towards cable route tracing shall be collected in addition to the charges prescribed above.

For further information please contact:

1. Executive Engineer/Control Centre: 94458 50802.
2. Assistant Executive Engineer/Cables-I: 9444915398
3. Assistant Executive Engineer/Cables-II: 94458 50808
4. Assistant Executive Engineer/Cables-III 94458 50809

Email –id - eecccdc@tnebnet.org

தமிழ்நாடு மின்வாரியத்தில் (GCC) பொது கட்டுமான வட்டத்தில் 318 ( RWE 307 + Driver 11 ) களப்பணியாளர் உயர் பதவி பணியிடம் உருவாக்கம்.

மின்துறை அமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு மின்வாரியத்தில் (GCC) பொது 

கட்டுமான வட்டத்தில் 318 ( RWE 307 + Driver 11 )களப்பணியாளர் உயர் பதவி 

பணியிடம் உருவாக்கம். இதன் முலம் 1219 ஊழியர்கள் பயணடைவர்.

CREATION OF POSTS IN GENERAL CONSTRUCTION CIRCLES (RWE)

Special Grade Foreman -36 

Foreman Gr.I - 78

Line Inspector (equivalent) - 45


Wireman (equivalent) - 12


Helper - 87


Mazdoor - 49 TOTAL 307.

CREATION OF POSTS IN GENERAL CONSTRUCTION CIRCLES (DRIVERS)


Foreman Gr.I - 11

ஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

      உடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

             சென்னை ஐகோர்ட்டில் கல்வித்துறையில் பணியாற்றும் வி.ஜனாகிராமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மாற்றுப்பணி

           பள்ளிக் கல்வித்துறையில் 2003-ம் ஆண்டு இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தேன். இதன்பின்னர், எனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதால், மாற்றுப்பணியாக டெலிபோன் ஆப்ரேட்டர் பணி வழங்கப்பட்டது. இதற்கிடையில், உதவியாளர் பதவி உயர்வுக்கு, இளநிலை உதவியாளர் பெயர் பணி மூப்பு பட்டியலை அதிகாரிகள் தயாரித்தனர்.

18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.

கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர்நிராகரித்ததைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது."ஆறு வாரங்களில்விண்ணப்பத்தை பரிசீலித்து,உத்தரவுபிறப்பிக்க வேண்டும்' என,அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தபிரீத்தி என்பவர்,தாக்கல் செய்த மனு:என் தந்தைகாஞ்சிபுரத்தில் உள்ள,நில அளவை ஆவணத் துறையில், "பிர்கா சர்வேயர்ஆக,பணியாற்றி வந்தார். 2003,செப்டம்பரில்தந்தை இறந்தார்.கருணை அடிப்படையில்என்சகோதரிக்கு வேலை கோரி, 2004, மார்ச்ஆகஸ்ட் மாதங்களில்தாயார் விண்ணப்பித்தார். பின்சகோதரிக்கு திருமணம் நடக்க இருப்பதால்எனக்கு கருணை வேலை கேட்டு, 2005,செப்டம்பரில்,விண்ணப்பித்தார். அப்போது,வேலை நியமனங்களுக்கு தடை இருந்ததால்,"தடை நீ"ங்கிய பின்வேலை கோரலாம்எனதாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் : "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை துவங்கியது


திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், மின் கட்டணம், கடைசி தேதி குறித்த "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை நேற்று துவங்கியது. மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்து "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் மொபைல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மின் கோட்டத்திலுள்ள 2.30 லட்சம் மின் இணைப்புகளில், இதுவரை 1.40 லட்சம் பேர் மின் இணைப்பை பதிவு செய்துள்ளனர். எஸ்.எம்.எஸ்., சேவை நேற்று துவங்கியது. எஸ்.எம்.எஸ்.,ல், மின் இணைப்பு எண், ரீடிங், பயன்பாடு, மின் கட்டண தொகை, செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகியவை இருக்கும். திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுப்ரமணியம் கூறுகையில், ""மின் கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., சேவை இன்று (நேற்று) துவங்கியது. இனி, கணக்கீட்டாளர்கள் ரீடிங் எடுத்தவுடன், எஸ்.எம்.எஸ்., உடனடியாக வரும். நடப்பு மாதத்தில் முன்னதாக எடுத்தவர்களுக்கு வராது; அடுத்த முறை ரீடிங் எடுத்த பிறகு வரும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், தங்கள் மொபைல்போன் எண்ணை பதிவு செய்யலாம். மின் இணைப்பு எண் ணுடன் கொடுக்கப்படும் மொபைல்போன் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும் தங்கள் மொபைல்போன் எண்ணை 
கொடுக்கலாம்,''  என்றார்.

Award of incentive to the employes who have rendered 25 years of unblemished service - certain clarifications-orders issued

.Stores. Custodian II Gr 206 Persons Allotment

PROPOSED RWE STAFF STRENGTH IN THE GENERAL CONSTRUCTION CIRCLES

Draft Memorandum of Settlement under Sec 18(1) of the Industrial Disputes Act, 1947 reached between the  TANGEDCO and its Workmen.

Parties to the settlement            : TANGEDCO & ITS WORKMEN

Names of the Representatives   :

REPRESENTING EMPLOYER        :  1. Thiru. G. Rajagopal,
                                                           Director/Finance (TANGEDCO).  

       2. Thiru. S. Akshayakumar, 
                                                           Managing Director (TANTRANSCO) (A/c).

அரசு அத்தாட்சியாகிறது செல்போன் எஸ்.எம்.எஸ்.

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை அத்தாட்சி யாக ஏற்றுக் கொள்ளும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் இணைய தளம் மூலம் முன்பதிவு செய் யப்படும் டிக்கெட்டுகளின் அச்சு பிரதி களுக்குப் பதிலாக செல்போன் எஸ்.எம்.எஸ்., இ-மெயில் தகவல்களை காண்பித்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அதுபோல் மத்திய அரசின் 100 துறைகளில் செல்போன் சேவை திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றது.இதைத் தொடர்ந்து “மொபைல் சேவை” என்று பெயரில் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் செல்போன் மூலம் சேவை வழங்கும் திட்டம் இப்போது தொடங்கப் பட்டுள்ளது. இதன் தொடக்க விழா டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பச் செயலாளர் சத்திய நாராயணா, மொபைல் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Filling up of vacancies to the post of J.E/Mech. II Gradeselection from Diploma Holders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

                                                                   144, Anna Salai,                                                      
                                                                   Chennai-600 002.                       

                                                                       
Memo  No.057043/706/G15/G.151/2013-2, dated   21.12.2013.

                   Sub :-  Establishment - Class III Service –  Filling up of
                             vacancies to the post of J.E/Mech. II Grade
                             selection from Diploma Holders  orders issued.

J.E/Mech. II Grade Selection from RWE Employees (Non-Diploma Holders) for appointment as J.E/Mech. II Grade by appointment - Allotment

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH

                                                           144, Anna Salai,                                                      
                                                                   Chennai-600 002.                       

                                                                       
Memo  No.057043/706/G15/G.151/2013-1, dated  21.12.2013.

                   Sub :-  Establishment - Class III Service –  J.E/Mech. II Grade
                             Selection from RWE Employees (Non-Diploma Holders)
                             for appointment as J.E/Mech. II Grade by appointment
                              - Allotment orders issued.

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.


இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் ஊதிய திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை வழங்க வேண்டும். இந்த பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

அதேசமயம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாயாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு கட்டாய மின் சிக்கன விதிமுறைகள் பரிசீலனை

(கோப்புப் படம்)

புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் சிக்கன கட்டாய விதிகளை அமல்படுத்துவது குறித்து எரிசக்தித் துறை ஆய்வு செய்து வருவதாக தமிழக மின் துறை தலைமை ஆய்வாளர் அப்பாவு கூறியுள்ளார்.
தேசிய மின் சிக்கன வார விழா, சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதில் தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘மின் தேவை ஆண்டுதோறும் எட்டு சதவீதம் உயர்கிறது; ஆனால், அதற்கேற்ப உற்பத்தி உயர்வதில்லை. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க, முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். வரும் நிதியாண்டுக்குள் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீங்கி, மின் வெட்டு முற்றிலுமாக தளர்த்தப்படும். மின் சிக்கனத்தை கவனத்தில் கொண்டு, குடிசைகளில் குண்டு பல்புகளை மாற்றி சி.எப்.எல். பல்புகள் தர அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும்’’ என்றார்.

ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு-தினமலர் செய்தி

குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



மத்திய மின் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, எரிசக்தி திறனூக்க செயலகம் சார்பில், 'பச்சத் லேம்ப் யோஜனா' என்ற, விளக்கு மூலம் மின்சாரம் சேமிப்பு என்ற திட்டம், 2009, பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மீட்டர் பொருத்தப்பட்ட, வீட்டு மின் நுகர்வோருக்கு, திறன் குறைந்த குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, சி.எப்.எல்., பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், அதிகபட்சம், நான்கு பல்புகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

தமிழகத்தில், மின்சார வாரியம் சார்பில், 2010 செப்டம்பரில், முதல் கட்டமாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில், 1,167 வீட்டு மின் நுகர்வோருக்கு, தலா, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்புகள் விற்பனை செய்யப்பட்டன. சி.எப்.எல்., பல்பு தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான, 'பாஸ்பரஸ்' விலை உயர்ந்ததால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இந்நிலையில், 14.62 லட்சம் மீட்டர் பொருத்தப்பட்ட, குடிசை மின் இணைப்புகளுக்கு, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்பு விற்பனை செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 14.62 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. முதலில், இத்திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தவும், பின் படிப்படியாக, அனைத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுத்தவும், மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. 

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு துறை நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதியுதவி பெற்று, 100 ரூபாய் அடக்க விலை கொண்ட, ஒரு சி.எப்.எல்., பல்பு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

100 மணி நேரம் ஒரு யூனிட்: வீடுகளில் பயன்படுத்தப்படும், 100 வாட்ஸ் குண்டு பல்பு, 10 மணி நேரம் எரிந்தால், ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதேசமயம், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 100 மணி நேரம் எரிந்தால் மட்டுமே, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்

இ.பி.எப்., முதலீடு 8.5 சதவீத வட்டி?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

இன்று (17.12.2013) நாளிட்ட கடிதத்தில் நமது வாரியத் தலைவர் அவர்கள் நமது வாரியத்தில் பணிபுரியும் அனைவரையும் பாராட்டி ஒரு மடல் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.


APPOINTMENT OF SE/CIVIL AS ADDITIONAL CHIEF ENGINEERS /CIVIL

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  - Class I Service  -   Appointment of Superintending Engineers/Civil as Additional Chief Engineers/Civil –Orders - Issued.

CE/PERSONNEL CHENNAI ADDITIONAL CHARGE ARRANGEMENT

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED

                                                                                           SECRETARIAT BRANCH
                                                                                     144, ANNA SALAI,
                                                                                       CHENNAI-600 002.
Memorandum No.89494/A1/A12/2013-1, dated  17.12.2013 

Sub:
Establishment – Class-I Service – Chief Engineer/Personnel/ Chennai - Additional charge arrangements – Orders – Issued.

Superintending Engineer/Mechanical – Posting - Modification - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  -  Class I Service  -  Superintending  Engineer/Mechanical – Posting - Modification - Orders - Issued.

Under Secretary - Transfer and Posting

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (SECRETARIAT BRANCH)
                                                                                                   144, ANNA SALAI,
                                          CHENNAI-600 002. 
Memorandum No.89636/A1/A12/2013-1,  dated   17.12.2013 
          Sub:   Establishment - Class I Service – Under Secretary - Transfer and
                   Posting – Orders -  Issued.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்ப வேண்டும்'

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன், 2011-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அந்தப் பதவி காலியாக உள்ளது.
புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை அரசு அமைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தலைவர் பதவியை நிரப்பும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது.

TNEO மேல்முறையீட்டு மனு 27,28 ன் தீர்வு

Jain-AP No.27 of 2013.pdf

View       Download



Jai - AP No.28 of 2013.pdf


View      Download

Technical Asst Direct recruitment Elec/Mech -Interview for the left out Diploma apprentice from 23/12/2013 and 24/12/2013 at chennai as per Court Direction -press release2

TA INTERVIEW.pdf

View      Download

Delegation of Powers to Assistant Engineers/Junior Engineers to sanction service connection in respect of LT Domestic and Commercial service connections -Clarification -Reg.

VACANCY POSITION PARTICULARS CALLED FOR

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH
 From                                        
 Er. A.RAJA, B.E., F.I.E.,  
Chief Engineer/Personnel,          
144, Anna Salai,                                                      
Chennai-600 002.                        
 To
  1. All Chief Engineers,
  2. All Superintending Engineers,
                                                           
Letter No.009529/G15/G.152/2013-4, dated    16.12.2013.
Sir,
                   Sub :-  Establishment - Class II Service –  J.E/Civil IIGrade, J.E/Mech, II Grade, A.E/J.E/Mech. I Grade, A.E/J.E/Civil I Grade, A.E.E/Civil, A.E.E/Mechanical,Junior Chemist, Senior Chemist, Chief HeadDraughtsman – Vacancy position along withDisposition list particulars called for – Reg.

2க்கும் மேல் மின் இணைப்பு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை:வருவாயைப் பெருக்க மின்வாரியம் அதிரடி ( தினமலர் )

ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேலும் மின் இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு பெறுவது வழக்கம். பெரிய கட்டடமாக இருந்தாலும், மாடி வீடாக இருந்தாலும் மற்றொரு மின் இணைப்பு பெற்று பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. அதேப்போன்று வாடகைதாரர்கள் வசிக்கும் ஒரே வீட்டில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் கூட்டு குடியிருப்பு பகுதியில் அவரவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் உரிய தொகை செலுத்தி வருவதால் பயனாளிகளிடையே பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. மொத்த தேவையான 12 ஆயிரம் மெகாவாட்டில் அதிகபட்சமாக 9,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.குறைவாக உள்ள 3,000 மெகாவாட் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், கிடைக்கின்ற மின்சாரத்தை வைத்து வருவாயைப் பெருக்கவும் மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின் உற்பத்திக் கட்டணம் உயர்ந்துள்ளதையொட்டி தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டணம் ஒவ்வொரு சிலாப்புக்கும் மாறுபடுகிறது.இரண்டு மாதங்களில் 100 யூனிட் மின்சாரம் உபயோகிக்கும் வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் கட்டணமும், 200 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 1.50 எனவும், 500 யூனிட் வரை 3 ரூபாயாகவும், 500க்கு யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 5.75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு குறைந்தளவு மின்சாரம் உபயோகிப்பாளர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகை கட்டணத்தை தனித்தனி மின் இணைப்பு பெற்றவர்களும் குறைவான மின்சார கட்டணம் செலுத்த முடியும். இதனைத் தவிர்க்க ஒரு கட்டடத்தில் ஒரே உபயோகத்திற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்புகள் இருக்கக் கூடாது என மின்வாரியம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

இதனை அமல்படுத்தும் பொருட்டு கடலூரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வீடுதோறும் சென்று 2 இணைப்புகள் உள்ளதா? அவ்வாறு இருந்தால் உடனே மின்வாரிய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும், வருகை தராதவர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.முன்கூட்டியே நுகர்வோருக்கு எந்த அறிவிப்பும் செய்யாமல் திடுதிப்பென மின்வாரியம் எடுத்துள்ள முடிவால் உபயோகிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களுக்கு, விரைவாக தீர்வு கண்டதில், துறை ரீதியாக, முதல் விருது தமிழ்நாடு மின்வாரியத் தலைவர், திரு. கே.ஞானதேசிகன் அவர்களுக்கு முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.

 சென்னை: கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநாடு நிறைவு நாளில், சிறப்பாக செயல்பட்ட, கலெக்டர்கள் உட்பட 24 பேருக்கு, முதல்வர் விருது வழங்கி பாராட்டினார்.



கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, கடந்த, 11ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது மாடியில் துவங்கியது. நேற்று மாலை, 4:00 மணிக்கு கூட்டம் நிறைவு பெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக, சிறப்பாக செயல்பட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, விருது வழங்கப்பட்டது




முதல்வர் தனிப்பிரிவுக்கு வந்த மனுக்களுக்கு, விரைவாக தீர்வு கண்டதில், துறை ரீதியாக,   முதல் விருது  தமிழ்நாடு மின்வாரியத் தலைவர், திரு. கே.ஞானதேசிகன் அவர்களுக்கும்,  இரண்டாவதாக  சென்னை மாநகராட்சி கமிஷனர், விக்ரம் கபூர், மூன்றாவதாக மெட்ரோ குடிநீர் மேலாண் இயக்குனர், சந்திரமோகன் ஆகியோர், முறையே, முதல், மூன்று இடங்களைப் பெற்றனர்.  

SE/ELECTRICAL promotion and transfer orders - issued

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - Class I Service - Superintending Engineer/Electrical – Transfer and Posting - Orders - Issued.

CE Transfer order -issued

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (ABSTRACT)
Establishment - Class I Service - Chief Engineers/Electrical - Transfers and Postings - Orders - Issued.

ஒரே உறுப்பினர் கூட வழக்குகளை விசாரிக்கலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம்

ஒரேயொரு உறுப்பினர் கூட வழக்குகளை விசாரிக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின் வாரியம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது, மின்சாரம் வாங்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர் பணியிடங்கள் உள்ளன. வழக்குகளை விசாரிப்பதற்கு குறைந்தபட்சம் 2 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இப்போது ஒரேயொரு உறுப்பினர் மட்டும் உள்ளார். தலைவர், உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், வழக்குகளை விசாரிக்க முடியாத நிலை உள்ளது.எனவே, வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக விதியைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான வரைவு திருத்த விதி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் (www.tnerc.gov.in) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் திருத்தம் தொடர்பாக, ஜனவரி 12-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 19-ஏ, ருக்மிணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு கருத்துகளை அனுப்பலாம்.

மின் அழுத்தம் சம்மந்தமாக P.முத்துசாமி வேலச்சேரி அவர்களின் மேல்முறையீட்டு மனுவின் TNEO முடிவு

Muthusamy AP No 67of 2013-.pdf

View     Download

Draft of amendment to the TNERC -Conduct of Business Regulations Comments Invited By 12-01-2014

Draft- CBR amendment -13-12-2013.pdf

View           Download

EE/MECHANICAL TRANSFER POSTING

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.72757/A1/A11/2013-1,  dated   11.12.2013

          Sub:   Establishment - TANGEDCO Class I Service - Executive  Engineers/
                    Electrical – Transfers and postings - Orders - Issued.

EE/ELECTRICAL TRANSFER POSTING

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.72757/A1/A11/2013-1,  dated   11.12.2013

          Sub:   Establishment - TANGEDCO Class I Service - Executive  Engineers/
                    Electrical – Transfers and postings - Orders - Issued.

EE/CIVIL VACANCY POSITION URNT

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH

 From                                                  
Er. A. RAJA, B.E., F.I.E.,                                   
Chief Engineer/ Personnel,
144, Anna Salai,
Chennai – 2.