மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டதற்கு அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
       அரசு ஊழியர்களின் 9 மாதபேறுகால விடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.
       அதில் பேறுகால விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரிகரிக்கப்பட்டு  வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந் சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் மகப்பேறு விடுப்பு காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்துவதாக தெரிவித்திருந்தார். சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த ஜெயலலிதா மருத்துவ துறையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டார். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் தமிழகம் சாதனை படைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, தமிழக அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்பது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்புகளில் முக்கியமானது. மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக உயர்த்தும் சட்டதிருத்தம் மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: