2017ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

'2017 has 22 government holidays' TN goverment released GOசென்னை: 2017ஆம் ஆண்டுக்கான அரசு விடுமறை நாட்களை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆண்டில் பொங்கல், தீபாவளி உட்பட 22 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 14 நாட்கள் வார நாட்களாகவும் எஞ்சிய 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளகவும் உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு ஞாயிற்றுக் கிழமையன்றும் பொங்கல் சனிக்கிழமையன்றும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் 6 நாட்கள் திங்கட்கிழமைகளாக உள்ளன.
விடுமுறை நாட்களின் பட்டியல்
1. ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை
2.பொங்கல் 14.01.2017 சனிக்கிழமை
3.திருவள்ளுவர் தினம் 15.01.2017 ஞாயிற்றுக்கிழமை
4.உழவர் திருநாள் 16.01.2017 திங்கட் கிழமை
5.குடியரசு தினம் 26.01.2017 வியாழக்கிழமை
6.தெலுங்கு வருடப் பிறப்பு 29.03.2017 புதன் கிழமை
7.வங்கிகள் ஆண்டு கணக்கு 01.04.2017 சனிக்கிழமை
8.மாகவீர் ஜெயந்தி 09.04.2017 ஞாயிற்றுக்கிழமை
9.தமிழ்ப்புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக் கிழமை
10.மே தினம் 01.05.2017 திங்கட் கிழமை
11.ரம்ஜான் 26.06.2017 திங்கட்கிழமை
12.கிருஷ்ண ஜெயந்தி 14.08.2017 திங்கட் கிழமை
13.சுதந்திர தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமை
14.விநாயகர் சதுர்த்தி 25.08.2017 வெள்ளிக்கிழமை
15.பக்ரீத் 02.09.2017 சனிக்கிழமை
16.ஆயுத பூஜை 29.09.2017 வெள்ளிக் கிழமை
17.விஜயதசமி 30.09.2017 சனிக்கிழமை
18.மொகரம் 01.10.2017 ஞாயிற்றுக் கிழமை
19.காந்தி ஜெயந்தி 02.10.2017 திங்கட் கிழமை
20.தீபாவளி 18.10.2017 புதன் கிழமை
21.மிலாது நபி 01.12.2017 வெள்ளிக்கிழமை
22.கிறிஸ்துமஸ் 25.12.2017 திங்கட் கிழமை

No comments: