இப்போதுள்ள மின் கட்டணத்தையே தொடர்வதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப்போதுள்ள மின் கட்டணம் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உத்தரவு மார்ச் 31-ஆம் தேதியோடு காலாவதியானதால், அதே கட்டண விகிதத்தை நீட்டித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஜி.ராஜகோபால், எஸ்.நாகல்சாமி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
எனவே, கட்டணத்தை மாற்றுவதற்கு ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரையில் இப்போதுள்ள கட்டணமே தொடரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த குடிசை வகை பயன்பாடு மின்சாரத்துக்கான மாதம் ஒன்றுக்கான நிலைக் கட்டணம் ரூ. 60-லிருந்து ரூ. 125-ஆக அதிகரிக்கவும், தாழ்வழுத்த விவசாய வகை பயன்பாடு மின்சாரத்துக்கான ஆண்டு நிலைக் கட்டணம் ரூ. 1,750-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தவும் பரிந்துரைத்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment