தமிழக பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் பணிகள் 98 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் தொழிற்சாலை துறைகளில் உதவி பொறியாளர் பணியில் சேருவதற்கான ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ் சேவை இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. இதற்காக தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

1. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையின் நீர்வளத்துறை: 50 இடங்கள்.

2. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையில் கட்டிடப்பிரிவு: 21 இடங்கள்.

3. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) பொதுப்பணித்துறையின் மின் பிரிவு: 9 இடங்கள்.

4. ஆலை பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உதவி இயக்குநர்: 18 இடங்கள்.



வயது வரம்பு: 

1.7.2014 அன்று 18 லிருந்து 30க்குள். எஸ்சி., எஸ்சி (அருந்ததியர்), எஸ்டி, மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர், முஸ்லிம் மற்றும் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: 

வரிசை எண்: 1, 2 ஆகிய பதவிகளுக்கு சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., முடித்திருக்க வேண்டும். 

வரிசை எண்: 3 பதவிக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வரிசை எண்: 4 பதவிக்கு மெக்கானிக்கல்/ புரடக்சன்/ இன்ட்ஸ்ட்ரியல்/ எலக்ட்ரிக்கல்/ கெமிக்கல் இன்ஜினியரிங்/ டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 

அனைத்து பணிகளுக்கும் ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.5,100. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்னை, கோவை, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, நீலகிரி, வேலூர், சிதம்பரம், காஞ்சிபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வு கட்டணம்: 

ரூ.175. (விண்ணப்ப கட்டணம் ரூ.50 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.125). தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகை பெறுபவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
டிஎன்பிஎஸ்சியில் ஒரு முறை கட்டணமாக ரூ.50 செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்ப கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு முறையில் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் அல்லது இந்தியன் வங்கி கிளைகள், குறிப்பிட்ட தபால் நிலையங்களில் செலுத்தலாம்.

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.4.2014.

வங்கி அல்லது தபாலில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 25.4.2014.


Thanks to dinakaran

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click