பல்லடத்தில் மின் கம்பி திருட்டு: தொடரும் சம்பவத்தால் பரபரப்பு


பல்லடத்தில் மின் கம்பி திருட்டு: தொடரும் சம்பவத்தால் பரபரப்பு
பல்லடம் அருகே உள்ளது ரங்கசமுத்திரம். இங்குள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் உள்ள பழைய மின் கம்பிகளை மாற்றி புது கம்பி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
 
இங்குள்ள மின் கம்பத்தின் அருகே 1340 மீட்டர் மின்கம்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை யாரே மர்ம நபர்கள் திருட்டிச் சென்றுவிட்டனர். இதையறிந்த பல்லடம் உதவி செயற்பொறியாளர் தங்கராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
 
பின்னர் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். திருட்டுப் போன கம்பியின் மதிப்பு ரூ.17800 ஆகும் என்றார். பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கம்பியை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் உள்ள ஊஞ்சப்பாளையம் பகுதியில் ஆயிரத்து 500 மீட்டர் நீளமுள்ள மின்கம்பி திருட்டு போனது. மின்கம்பிகளை குறிவைத்து திருடும் கும் பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: