உடுமலைப்பேட்டை அருகே பூலவாடி கிராமத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இந்த மின்நிலையத்தின் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்றில்
ஜூன், 19- மதியம் தீடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்பட்டதும் மின் வாரிய அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் 1 மணி நேரம் போராடியும் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். 110 கேவி டிரான்ஸ்பர்மரில் தீப்பிடித்ததால் அதில் குளிரூட்டுவதற்காக ஊற்றப்பட்டிருந்த 5000 லிட்டர் எண்ணெயும் பற்றி எரிவதால் தீயை அணைக்க முடியாமல் பரிதவித்தனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டவுடன் மின்நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment