பகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை கிடையாது எனசென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டது.
பல்வேறு துறைகளில் பகுதி நேர, தாற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலஊழியர்களாக நியமிக்கப்பட்ட 50 பேரை நிரந்தரம் செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து, அரசு தாக்கல் செய்தமேல்முறையீடு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
உத்தரவு விவரம்:
தமிழக அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் முழு நேர தினசரிக்கூலிகளாக 2006 ஜன.1-க்கு முன்பு 10ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு 2006-ல் உத்தரவிட்டது. இந்த சலுகையை தங்களுக்கும் வழங்குமாறு பகுதி நேர ஊழியர்கள் 50 பேர் உயர்நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுக்கு சாதகமாக தனிநீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.
அரசு உத்தரவு பகுதி நேர ஊழியர்களுக்கும் பொருந்தும் என உத்தரவுகளை பிறப்பித்தது தவறானது. பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர துப்புறவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் கோரிய வழக்கில், கடந்த பிப்.21-ல்உச்சநீதிமன்றம் சட்ட விதியை தெளிவு படுத்தியது. பணி நிரந்தர உரிமை கோரும் ஊழியர்கள் பணிநியமன விதிகளின் படி நியமிக்கப்படவில்லை. காலியாக உள்ள பணிகளில், இவ்வாறு பகுதி நேர ஊழியர்களை நியமிப்பது, அப்பணிகளைச் செய்யும் தகுதியுடையவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். அதே சமயம், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரம் செய்ய சட்டபூர்வ உரிமை இல்லாததால், இரக்க உணர்வு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடியாது. எனவே, பணி நிரந்தரம்கோர பகுதிநேர ஊழியர்களுக்கு சட்டபூர்வ உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம்குறிóப்பிட்டு உள்ளது. இந்த உத்தரவு வெளியாகும் முன்பு, 2013 ஜூன் 27-ல் தமிழகஅரசு மேலும்ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 2006 ஜன.1- க்கு பிறகு நியமிக்கப்பட்டு 10 ஆண்டுகள் பணியாற்றிய முழுநேரஊழியர்களாக இருந்தாலும் பணி நிரந்தரம் பெற தகுதி கிடையாது என கூறப்பட்டுள்ளது. எனவே, பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம்செய்து தனி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன எனஉத்தரவில் குறிப்பிடப்பட்டது.இவ்வழக்கில், தனிநீதிபதிகளின் உத்தரவுகள் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர்களை அரசு தொந்தரவு செய்யாது என்ற அரசு கூடுதல்வழக்குரைஞரின் உறுதிமொழியை நீதிபதிகள் பதிவு செய்தனர்

No comments:
Post a Comment