அமைப்பு ரீதியான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின், ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய டிரஸ்டிகள் போர்டு கூடி, 5ம் தேதி முடிவு எடுக்கிறது.
மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின், முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய டிரஸ்டிகளின் போர்டு கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தலைமையில் வரும், 5ம் தேதி நடக்கிறது. இதில் அமைப்பு ரீதியான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை, 60 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இதில் முக்கியமாக, பென்ஷன் திட்டத்தில் 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு அளிக்கப்படும், இரண்டாண்டு போனசை வாபஸ் பெறுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. ஓய்வு பெறும் வயதை, இரண்டாண்டு அதிகரிப்பதன் மூலம், 27 லட்சம் பென்சன்தாரர்கள் பயன்பெறுவர். மேலும், பென்சன் திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு, குறைந்தபட்ச பென்சனாக, ஆயிரம் ரூபாய் வீதம் 1,217 கோடி ரூபாய் வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்கு துவக்குவதற்கு, குறைந்த பட்சம் சம்பளம், 6,500 ரூபாய் என்று இருப்பதை 15 ஆயிரமாக உயர்த்துவதற்கு, மத்திய டிரஸ்ட்கள் போர்டு ஒப்புதுல் அளிக்கும் என தெரிகிறது.
No comments:
Post a Comment