ஐடிஐ, டிப்ளமோ தகுதிக்கு இந்திய ரயில்வேயில் 26,567 பணியிடங்கள் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014.

விளம்பர எண்:  Centralised Employment Notice No.01/2014
இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 26 ஆயிரத்து 567 பணியிடங்களை நிரப்ப 21 ரெக்ருட்மென்ட் போர்டுகள் மூலம் அசிஸ்டென்ட் லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒரே நாளில் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளன. எனவே விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு ஆர்ஆர்பிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வில் ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலும், பிராந்திய மொழிகளிலும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.
சென்னை ஆர்ஆர்பியில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும், பெங்களூர் ஆர்ஆர்பியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, கொங்கணி ஆகிய மொழிகளிலும், திருவனந்தபுரம் ஆர்ஆர்பியில் மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம்.
சென்னை ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:

பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:
காலியிடங்கள்: 1666. (பொது- 782, எஸ்சி- 347, எஸ்டி- 275, ஒபிசி- 262,) இவற்றில் 160 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூர் ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்:
காலியிடங்கள்: 1172 (பொது- 762 எஸ்சி- 184, எஸ்டி- 82, ஒபிசி- 144). இவற்றில் 120 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம் ரயில்வேயில் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன்
காலியிடங்கள்: 294 (பொது- 58, எஸ்சி- 65, எஸ்டி- 60, ஒபிசி- 294). இவற்றில் 27 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசின் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அசிஸ்டென்ட் லோகோ பைலட் பணிக்கு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், எலக்ட்ரிசியன், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ மற்றும் டி.வி, எலக்ட்ரானிக் மெக்கானிக், மெக்கானிக் மோட்டார் வெஹிகிள், வயர்மேன், டிராக்டர் மெக்கானிக், ஆர்மெச்சூர் மற்றும் காயல் விண்டர், மெக்கானிக் டீசல், ஹீட் இன்ஜின், டர்னர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏசி மெக்கானிக் ஆகிய துறைகளில் ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் பணிக்கு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் சம்பந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஒபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு ரூ.40. இதனை சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ரெக்ருட்மென்ட் போர்டுகளில் எந்த மையத்திற்கு விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கிறாரோ அதன் பெயருக்கு டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத்தேர்வு, விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrbchennai.gov.in, www.rrbbnc.gov.in, www.rrbthiruvananthapuram.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.06.2014.
விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...