மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியை 3 மாதத்தில் நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் முத்துக்குமார சாமி, முரளி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:–
‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயிப்பது, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை விசாரிப்பது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த ஆணையத்தின் தலைவர் பதவி பல மாதங்களாக நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆணையத்தின் பணி முடங்கிய நிலையில் உள்ளது. எனவே, இந்த ஒழுங்கு முறை ஆணையத்துக்கு ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவர் ஆக நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி பால் வசந்தகுமார் ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தனர். அதில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியை நிரப்புவதற்கு தேர்வு கமிட்டியை தமிழக அரசு உடனே நியமிக்க வேண்டும்.
இந்த தேர்வு கமிட்டி தகுந்த நபரை தேர்வு செய்ய வேண்டும். அந்த நபரை தமிழக அரசு ஒழுங்கு முறை ஆணைய தலைவராக 3 மாதத்துக்குள் நியமிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click