தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், 110 நகரங்களில், மேம்பாடு மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக தனியார் நிறுவனம் மூலம் விபரம் சேகரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 110 நகரங்களில், விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு, சீரைமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மின் பயனீட்டாளர்களுக்கு சேவைகள் விரைந்து கிடைக்கும். குறைந்த மின் அழுத்த குறைபாடுகளை நீக்க, துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள் (டிõரன்ஸ்பார்மர்) அமைக்கப்பட உள்ளன. மின் பாதையில் ஏற்படும் இழப்பை குறைக்க அதிக திறன் கொண்ட மின் கம்பிகள் அமைக்கப்படும். மின் உபகரணங்களின் திறன், மின் இணைப்பு, நுகர்வோர் விபரங்கள், ஜி.பி.எஸ்., தகவல் தொழில்நுட்ப உதவியுடன் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை சென்னை நவயுகா இன்போடெக் என்ற நிறுவன ஊழியர்கள் சேகரித்து ருகின்றனர்.இப்பணியாளர்ளுக்கு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மூலம், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை, பயனீட்டாளர்கள் முழுமையாக வழங்க வேண்டும். அப்போது தான், கம்ப்யூட்டர் மயமாக்கல், விரைவான சேவை பயனீட்டார்களுக்கு கிடைக்கும். விபரங்கள் கூறும் பயனீட்டாளர்கள், பணம் தர தேவையில்லை. பணம் கேட்டால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கலாம் என, மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
No comments:
Post a Comment