ஒப்பந்த அடிப்படையில் 23 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியருக்கு ஓய்வூதிய பலன்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பை பார்க்க இங்கு சொடுக்கவும்

செங்கல்பட்டு அருகே உள்ள குண்டூர்  தொடக்கப்பள்ளி  தமிழாசிரியை  லலிதா  1987ல் இடைநிலை பள்ளி ஆசிரியையாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இவர்  ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும்  பணியை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில்   1991இல் வட மலை கிராம நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். 23 ஆண்டுகள் பணியாற்றிய அவரை பள்ளிக் கல்வித் துறை நிரந்தரம்  செய்யவில்லை.

2010 செப்டம்பர் 30ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றார். அவருக்கு ஊக்க ஊதியம், பிராவி டண்ட் பண்ட் , விடுமுறைக்கால சம்பளம்  உள்ளிட்ட  எந்த ஓய்வூதிய பலன்களும் தரப்படவில்லை.

அவர் பலமுறை தன்னை நிரந்தரம் செய்ய கோரி பள்ளிக் கல்வித் துறைக்கு மனு அனுப்பியும், பணியில் சேர்ந்த போது வயது வரம்பில்  9 மாதங்கள் அதிகம் இருந்ததால்  பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித் துறை நிராகரித்தது.  இதையடுத்து  உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை நீதிபதி  அரிபரந்தாமன் விசாரித்து  அளித்த உத்தரவு  வருமாறு;  தமிழக பள்ளிக்கல்வித்துறை 1989-ல் பிறப்பித்த அரசாணையில்  இடைநிலை பள்ளி ஆசிரியர்களாக  நியமிக்கப்பட்ட பட்டதாரிகள், தமிழ்பண்டிட்டுகளின்  வயது வரம்பை தளர்த்தி  நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரர் 23 ஆண்டுகள் எந்த பலன்களையும் பெறாமல் ஓய்வு பெற்றிருப்பது கொடுமையானது. அவரது வயது வரம்பைத் தளர்த்தி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  பொதுவான காரணத்தைக் கூறி அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்தது சரியான நடை முறையல்ல.

இந்த நடவடிக்கை 1989இல் அரசு வெளியிட்ட அரசாணைக்கு முரணானது. எனவே, மனுதாரரை  நிரந்தரம் செய்ய முடியாது  என்ற  பள்ளிக்கல்வித்துறையின்  உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.  அவர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து  கணக்கிட்டு  அவரை நிரந்தரம் செய்து அவருக்குரிய  ஊக்க ஊதியம், விடுமுறை சம்பளம் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் 2 மாதங்களில்  தரவேண்டும்.
- இவ்வாறு  கூறப்பட்டுள்ளது


No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...