சென்னை, ஜன.12- காற்றாலைகள் மூலம் மீண்டும் மின் உற்பத்தி மற்றும் மின் பயன்பாடு குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் மாவட்டங் களில் மின் வெட்டு நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரங்களில் காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 1000 மெகா வாட் வரை மின்சாரம் கிடைத்தது. இதனால், மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் 14 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
ஆனால், டிசம்பர் இரண்டாம் வாரம் முதல் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் முடங்கியது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக காற்றாலைகள் மூலம் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெள்ளிக்கிழமை 1000 மெகா வாட் வரை மின்சாரம் கிடைத்தது.
மேலும் இப்போது குளிர்காலம் என்பதால் நுகர் வோரின் மின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என மின் வாரிய உயர் அதிகாரி கூறினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக 7 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின் வெட்டு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர்.
இப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காலை 8-10, மதியம் 1.45 - மாலை 4, மாலை 6 - இரவு 7, அதன் பிறகு இரவில் ஒரு மணி நேரம் என்ற அளவில் மட்டுமே மின் வெட்டு செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment