சென்னை : சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு 2,500 மெகாவாட் மின்சாரம் இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டீஸ்கர் மாநிலத்தில், தமிழக அரசுக்கும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலக்கரி சுரங்க பகுதி ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு அருகிலேயே ஒரு சுரங்க வளாக அனல் மின் உற்பத்தி நிலையம் அமைத்து, அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தமிழக அரசின் எரிசக்தி துறை செய லாளர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ஞானதேசிகன், நிர்வாக இயக்குனர் மனோகரன் ஆகியோர் நேற்று சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கை சந்தித்து பேசினார்கள்.
சுமார் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்திற்கு சட்டீஸ்கர் அரசின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொள்ளப்பட்டது. சட்டீஸ்கர் மாநில அரசின் முழு ஒத்துழைப்பை அளிப்பதாக முதல்வர் ராமன் சிங் உறுதி அளித்துள்ளார். இத்திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு 2,500 மெகா வாட் வரை மின்சாரம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 comment:
Kadumaiyan..min..vettu..ulla..nilayil...indha,,,muyarchiyum...nadavadikkaiyum...parattathakkathu.......Tamilaga..Mudhalvar,,avargal..indha,...thittathai...pporkkala..adippadaiyil...seithu...mudippar..ena..nambikkaiyodu...kathiruppom.....krishnamoorthy gobi
Post a Comment