Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்

Jan 27, 2013

கையூட்டு ஒரு அலசல் ( (மின் வாரிய பிரிவு அலுவலரைப் பற்றிய அலசல்)

இது லஞ்சம் பற்றி இணைய தளத்தில் நண்பர் பதிந்த கருத்தை தங்களுக்கு பகிர்கிறேன் இது பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

லஞ்சம் என்பது நாட்டில் எந்த துறையிலும் தவிர்க்கமுடியாததாகிவிட்டதுஅதற்காக அதை நான் ஆதரிக்கவில்லைஆனால் இந்த விஷயம்தமிழ்நாடு மின் வாரியத்தில் ஏன் வேரூன்றி விட்டது என்பதை ஆராய்வோம்லஞ்சம்வாங்குவோரை நான்கு விதமாக பிரிக்கலாம்(1) வது நபர்காலையில் சட்டையை தலைகீழாக தொங்கவிட்டு பிறகு அதை எடுத்து மாட்டி அலுவலகம் வருபவர் [ இன்று எப்படியாவதுலஞ்சப்பணத்துடன் தான் வீட்டுக்கு செல்வதென கங்கனம் கட்டி வருவது ] (2) வது நபர்நாம்அன்றாட வேலையை பார்ப்போம்எவனாவது கொடுத்தால் வாங்குவோம்இல்லையானால்பரவாயில்லை (3) வது நபர்இவருக்கு இந்த லஞ்ச விஷயத்தில் விருப்பமில்லைஆனால் உயர்அதிகாரிகளின் வற்புறுத்தல் / வாரிய லாரி டிரைவருக்கு கொடுக்க / ஸ்டோருக்கு சாமான்வாங்கும் போது கொடுக்க / அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களுக்கு கப்பம் கட்ட / களப்பணிவேலைகளுக்கு வாரியம் சாமான்கள் வழங்காத நிலையில் அந்த சாமான்கள் வாங்க /களப்பணிக்கு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள போது பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க /நீதி மன்ற வழக்கின்போது வாரியம் வழங்கும் தொகைக்கு மேலாக வக்கீலுக்கு கொடுக்க வாரியபணிகளுக்காக செல்ல தனது வண்டிக்கு பெட்ரோல் செலவு / வண்டி வாடகைஅலுவலகவேலைகளுக்கான பேப்பர்,நோட்,கார்பன் இதர செலவு போன்றவை (4) வது நபர் இடியேவிழுந்தாலும் லஞ்சம் வாங்க மாட்டேன் எனும் பிரிவினர்இப்படி நான்கு பிரிவினர் உள்ளனர்.இவற்றில் முதலாவது நபர் மிகவும் பாதுகாப்பானவர்லஞ்ச ஒழிப்பு துறையிடம் பெரும்பாலும்மாட்ட மாட்டார்மிகவும் உஷாரானவர்ஏனென்றால் இவர் தொழில் தெரிந்தவர்மேலும் இவர்பிரியப்பட்டு கொடுத்தால் வாங்கிக்கொள்வார்ஆனால் அனைவரும் கண்டிப்பாகபிரியப்படவேண்டும் என்ற தத்துவம் தெரிந்தவர்இரண்டாவது நபருக்கு அவ்வளவாகபிரச்சனைகள் வருவதில்லைநான்காவது நபரைப்பற்றி சொல்லவேண்டாம்ஆனால் ஒன்று.இவரைபற்றி தனக்கு கீழ் பணிபுரிபவர்களும்தனக்கு மேல் உள்ளவர்களும் இவருக்கு வைத்தபெயர் இனா! வானாபிழைக்கத்தெரியாதவன்! - தா..மா! ..மா!இறுதியாக மூன்றாவது நபர்தான் சமுதாயத்துடன் இணங்கி வாழவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்ஆனால் இந்த தரப்புநபர்கள் தான் பெரும்பாலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்டிக்கொள்வர்எது எப்படியாகினும்,எந்த சூழ்நிலையிலும்கை நீட்டி லஞ்சம் பெற்றால் குற்றம் குற்றமேஅதற்கு தக்க தண்டனைஉண்டு. ஆனால் இக்குற்றத்திற்கு முதல் காரணகர்த்தா யார் என்றால் நான் மின்வாரியத்தைத்தான் சொல்வேன்தேவையான களப்பணியாளர்களை வழங்காதது,தளவாடப்பொருள்களை வழங்காததுவழக்குகளுக்கு போதுமான பணம் தராதது ஒரு புறம்.காசுக்காக தனக்குக் கீழே பணிபுரியும் அதிகாரியை காசு வாங்கித்தர  நாயை விட கேவலமாகமிரட்டுவதுபடியாமல் போனால் பேப்பரில் கை வைப்பதுதளவாட சாமான்கள் ஒதுக்கீட்டில்பாரபட்சம் காட்டுவதுபணம் தராத அதிகாரிகளுக்கு லாரிஸ்டோரில் பாரபட்சம் போன்றஎண்ணற்ற தொந்தரவுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளதுகுறிப்பாக ஸ்டோர் பிரிவினரோலாரிடிரைவரோபாதுகாப்பாக பிணம் தின்னி கழுகுகளாய் உளவும் உயர் அதிகாரிகளோ 99%மாட்டுவதே இல்லைமாறாக பிரிவு அலுவலர் அல்லது களப்பணியாளர் எவரேனும் மாட்டினால் நடக்கும் கொடுமைகள் பலபேர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைகையும் களவுமாகமாட்டும் நபர் முதலில் கடுமையாக அசிங்கப்படுத்தப்படுவார்அவரது வீடு சோதனைசெய்யப்பட்டு பணமோநகையோஇருந்தால் கைப்பற்றப்படும்அன்றைய தினமே ஜெயிலில்அடைக்கப்படுவார். (அவர் வருமானவரி செலுத்தியிருந்தாலும் சிறப்பு சலுகையேதுமில்லை).ஜாமீன் கிடைப்பது அரிதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம்.அதன் பிறகு வழக்கு முடிய சுமார் நான்கு ஆண்டுகள் அதற்கு மேலும் ஆகலாம்வழக்கின்தீர்ப்பு பெரும்பாலும் குற்றவாளிக்கு எதிராகவே அமையும்காரணம் பொதுவாக ஒரு குற்றம்நடந்துவிட்டால் நடந்த சூழல்தடயம்சாட்சிமுதல் தகவல் அறிக்கை முதலியவற்றின்ஆதாரத்தில் தான் விசாரணை நடக்கும்ஆனால் இந்த விஷயத்தில் இங்கு சொன்னஅத்தனையும் தயார் ஆன பின்பு தான் குற்றமே நடக்கிறது என்பதை அனைவரும் சற்றுசிந்தித்து பார்க்க வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து இரண்டாம்பணித்தொகுதியை சார்ந்த அலுவலருக்கு ஆறு மாதம் அரை சம்பளமும்பின்பு தீர்ப்பு வரும்வரை முக்கால் சம்பளமும் கிடைக்கும்தீர்ப்பு பாதகமானால் அன்று முதல் ஜெயில்தண்டனையுடன் வாங்கி வந்த சம்பளம்பென்சன் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.சொல்லப்போனால் குடும்பத்துடன் நடுத்தெருவுக்கே வந்துவிடுவார்இது தேவையா?

             ஆகவே நாம் அனைவரும் நான்காவது நபரைப்போல மற்ற நிறுவனங்களைக்காட்டிலும் நிறைவாக சம்பளம் தரும் நமது நிறுவனத்தில் கையூட்டுப்பெறாமல் நேர்மையுடன்பணியாற்றுவோம்பாதுகாப்புடன் பணியாற்றுவோம்.  
Post a Comment