பெரம்பலூர் மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ஏற்பாடு


பெரம்பலூர் மாவட்டத்தில் மின்கட்டணத்தை செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்படுகிறது என்று மின்வாரிய  மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் வளர்மதி தெரிவித்துள்ளார். இதுதொடர் பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் 9 பகிர்மான மண்டலங்களாக இயங்கி வருகின்றது. ஒவ்வொரு மண்டலத்தின் தாழ்வழுத்த மின் நுகர்வோர், தங்களது மண்டலத்திற்குள் உள்ள எந்தப்பிரிவு அலுவலகத்தில் வேண்டுமானாலும் மின்கட்டணம் செலுத்தும் வசதி கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரு கிறது. தற்போது மின்தொடர் மூலமாக ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக விரயங் களைக் கண்டறிய, மறுசீரமைக்கப்பட்ட முடுக்கிவிடப்பட்ட மின்வளர்ச்சி மற்றும் சீர்திருத்த திட்டம்   (ஸிகிறிஞிஸிறி  ஸிமீstக்ஷீuநீtuக்ஷீமீபீ கிநீநீமீறீமீக்ஷீணீtமீபீ றிஷீஷ்மீக்ஷீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ணீஸீபீ ஸிமீயீஷீக்ஷீனீs றிக்ஷீஷீரீக்ஷீணீனீனீமீ)   என்ற புதியத்திட்டத்தின் மூலமாக புதிய தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

       இந்தத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நுகர்வோர் சம்பந்தப்பட்ட சேவைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட உள் ளது. இதில் மின்கட்டணம் செலுத்தும் சேவைகளும் அடங்கும். இதனால் மேற்படி திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகரங்களுக்கு உட்பட்ட பெரம்பலூர் நகர் பிரிவு எண் 331, பெரம்பலூர் வடக்கு, பிரிவு எண் 335, பெரம்ப லூர் தெற்கு பிரிவு எண் 332, ஜெயங்கொண்டம் தெற்கு பிரிவு எண் 324, ஜெயங்கொண்டம் வடக்கு பிரிவு எண் 325 ஆகியப் பிரிவுகளில் உள்ள மின் நுகர்வோருக்குமட்டும் ஏற்கனவே உள்ள மண்டலமெங்கும் மின்கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்படும்.

                  இத்திட்டத்தின்கீழ் வரும் 110 நகரங்களிலுள்ள மின் நுகர்வோர், தங்களது மின் கட்டணங்களை தமிழ்நாடு முழுவதும், இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள 110 நகரங்களுக்குள் எங்கும் செலுத்தும் வசதி வழங்கப்படும். ஆனால், இந்நுகர்வோர், இத்திட்டத்தின் கீழ் வராத மற்ற பிரிவு அலுவலகங்களில் தங்களது மின் கட்டணத்தை செலுத்த இயலாது. அவ்வாறே, இத்திட்டத்தின் கீழ்வராத பகுதிகளிலுள்ள மின்நுகர்வோர், இத்திட்டத் தின் கீழ்வராத பிரிவு அலுவலகங்களில் மண்டலத்திற்குள் எங்கும் தங்களது மின் கட்டணத்தை செலுத்தலாம். பின்னர் இத்திட்டம் படிப்படி யாக விரிவுபடுத்தப்பட்டு நுகர்வோர் தங் களது மின் கட்டணத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள எந்த பிரிவு அலுவலகத்திலும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.
 
இருப்பினும் தற்போது பயன்பாட்டில் உள்ள இணையதளம், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கான மின்கட்டணங்களை செலுத்தும் வசதி தொடர்ந்து செயல்பாட்டிலிருக்கும். மேலே குறிப் பட்ட 5 பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மின் கட்டணத்தை நவம்பர் 24ம் தேதி மட்டும் இணையதளம் மூலம் செலுத்த வேண்டா மென கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click