புதியமின் இணைப்புக்கு இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதி தினமலர் செய்தி


சென்னை:லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. இதனால், கட்டுமான பணிகளை மேற்கொள்வோர், புதிய மின் இணைப்பிற்கு, வாரிய அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அங்கு, அதற்கான கட்டணத்துடன், லஞ்சம் தருவோருக்கு தான், மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை தரப்படுகிறது.நிராகரிப்புலஞ்சம் தராதவர்களின் விண்ணப்பங்கள், தாமதம் செய்யப்பட்டதோடு, கேள்வி கேட்பவர்களின் விண்ணப்பங்கள், ஏதேனும் காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டன. இதனால், பலர் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து, 2016 ஆகஸ்டில், புதிய மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம் துவக்கியது. அதில், அனைத்து விபரங்களும் கணினியில் பதிவாவதால், எந்த இடத்தில் தாமதம் ஏற்படுகிறது என்பதை, துல்லியமாக கண்டறிய முடியும். இணைப்பு வழங்க தாமதிக்க முடியாது. ஆனால், அத்திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதுவரை, 15 ஆயிரம் பேர் மட்டுமே, இணையதளத்தில் விண்ணப்பித்து உள்ளனர்
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிராமங்களில் வசிப்போர் சிரமப்படுவர் என்பதால் தான், மின் இணைப்பிற்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பம் பெறாமல், விண்ணப்பம் வாயிலாகவும் பெறப்படுகிறது. காகித பயன்பாடுதற்போது, கிராமங்களிலும், வேகமான இணைய சேவை, எப்போதும் கிடைக்கிறது. இது குறித்த, விபரமும், அங்குள்ளவர்களிடம் உள்ளது. இதனால், லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, புதிய இணைப்பிற்கு, இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசிக்கப்படும். இந்த முறையால், காகித பயன்பாடு, செலவு, நேரம் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click