மின் வாரிய இணையதள சேவைக்கு இனி சொந்த தொலைதொடர்பு வசதி

அனைத்து அலுவலகங்கள் இடையில், கம்ப்யூட்டர் வாயிலாக பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கு, இனி, சொந்த தொலைதொடர்பு வசதியை பயன்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி, அந்த கோபுரத்தில், மூன்று கம்பியில் மின்சாரம் செல்கிறது.அதன் மேல், 'எர்த் ஒயர்' செல்கிறது. இது, இடி, மின்னலின் போது, மின் கம்பியை பாதுகாக்கிறது. அதிக திறன் உள்ள, மின் கோபுர வழித்தடத்தில், 'எர்த் ஒயருக்கு' பதில், 'பைபர் ஆப்டிக் கிரவுண்ட் ஒயர்' என்ற, தொலைதொடர்புக்கு உதவும், 'கேபிள்' அமைக்கப்படுகிறது.

அந்த கேபிள், எர்த் ஒயராக செயல்படுவதுடன், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன் படுகிறது.தகவல் பரிமாற்றம்இதன் வாயிலாக, மின் நிலையங்கள்; துணை மின் நிலையங்கள் இடையில், அதிகாரிகள், தொலைபேசியில் பேசுவதுடன், கம்ப்யூட்டரில், தகவல் பரிமாற்றங் களையும் மேற்கொள்கின்றனர்.

தற்போது, அந்த சேவையை, தலைமை அலுவலகம் முதல் பிரிவு அலுவலகம் வரை, கம்ப்யூட்டரில் பெறப்படும், தகவல் பரிமாற்ற சேவைகளுக்கும் பயன்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், ஒன்பது மண்டலம், 42 மின் பகிர்மான வட்டங்கள், 3,000 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்கள் இடையே, இணையதளம் வாயிலாக, மின் கட்டணம், உபகரணங்கள் இருப்பு, ஊழியர்கள் விபரம் போன்ற தகவல் பரிமாற்றங்கள், பொது அல்லது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, ஒரு அலுவலகத்திற்கு, மாதம் குறைந்தது, 1,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆண்டுக்கு, பல லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த செலவை தவிர்க்க, சொந்த தொலைத் தொடர்பு வசதி பயன்படுத்தப்பட உள்ளது.புதிய திட்டம்தற்போது, பைபர் ஆப்டிக் இணைப்பில் உள்ள, துணை மின் நிலையங்கள், அதன் அருகில் உள்ள, மின் வாரிய அலுவலகம் வரை, 'கேபிள்' அமைக்கப்பட்டு இணைக்கப்படும்.

இதனால், அந்த அலுவலகங்களிலும், சொந்த தொலைத்தொடர்பு சேவை கிடைக்கும். இதன் வாயிலாக, தொலைத்தொடர்பு சேவைக்கு, மற்ற நிறுவனங்களை சார்ந்திருக்க தேவையில்லை. அதற்காக செலவழிக்கும் நிதியில், புதிய திட்டங்களை மேற்கொள்ளலாம்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...