மின் கட்டணம் செலுத்த இ-சேவை மையங்கள் : மின்சாரத் துறை அறிவிப்பு - dinamani

சென்னையில் துவங்கப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் மின் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் பயனடையலாம் என மின்சாரத் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த பல ‘மாற்று முறை மின் கட்டண சேவைகளை’ நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த வசதிகளின் மூலம், மின் நுகர்வோர்கள் வங்கி பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலமாகவோ, இணையதள வங்கி சேவை மூலமாகவோ, 24 மணி நேர தானியங்கி இயந்திரம் மூலமாகவோ, வங்கி முகப்புகள், தபால் நிலையங்கள், கைபேசி வங்கி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவோ, மின் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.
மேலும் தமிழக முதல்வரால் சென்னையில் துவக்கி வைக்கப்பட்ட அரசு பொது இ-சேவை மையங்களில் (மயிலாப்பூர் தாலுகா அலுவலகம், எழும்பூர் தாலுகா அலுவலகம், மாம்பலம் தாலுகா அலுவலகம், சைதாப்பேட்டை பிரிவு குடிநீர் வாரிய அலுவலகம், அசோக் நகர் பிரிவு குடிநீர் வாரிய அலுவலகம், அடையாறு மாநகராட்சி அலுவலகம், ராயபுரம் மாநகராட்சி அலுவலகம், ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பேட்டை நகர்ப்புற கடன் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் - சோழிங்கநல்லூர், ஐயப்பந்தாங்கல், நாவலூர், கோவூர்,கோலப்பாக்கம்) பொது மக்களுக்காக அரசுத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக மின் கட்டணம் செலுத்தும் வசதியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
இந்த பொது இ-சேவை மையங்களில் மின் நுகர்வோர்கள் தங்கள் மின் கட்டணத்தை பணம் அல்லது காசோலை அல்லது கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை இந்த பொது இ-சேவை மையங்கள் செயல்படும். மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்தத் தங்களுக்கு அருகாமையில் உள்ள அரசு பொது இ-சேவை மையங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/latest_news/2014/07/09/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE/article2322087.ece

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click