திருப்பூர்:மின்வாரியத்தின் நவீன சேவைகளை பயன்படுத்த, திருப்பூரில் மின் நுகர்வோர் தயக்கம் ( தினமலர் )


திருப்பூர்:மின்வாரியத்தின் நவீன சேவைகளை பயன்படுத்த, திருப்பூரில் மின் நுகர்வோர் தயக்கம் காட்டுகின்றனர்.
திருப்பூர் கோட்ட மின்வாரியத்தில் 2.30 லட்சம் இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் மின் தடை நீக்கும் மையம், மின் கட்டணம் குறித்து தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ்., வசதி, தபால் மற்றும் வங்கிகளில் பணம் செலுத்தும் வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வசதிகளை சொற்ப அளவிலான மக்களே பயன்படுத்துகின்றனர்.மின்தடை நீக்கும் மையம்மின் தடங்கல், துண்டிப்பு, பியூல் கால் குறித்து புகார் செய்ய, 24 மணி நேரமும் செயல்படும் மின் தடை நீக்கும் மையம் உள்ளது. இலவச தொலைபேசி எண்2259 100, 2478 777; 94458 58778; 94458 58779 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

இதில், ஏதேனும் ஒரு எண்ணுக்கு அழைத்து, 10 இலக்க மின் இணைப்பு எண், முகவரி கொடுத்தால் உடனடியாக பதிவு செய்து, காத்திருப்பு எண் வழங்கப்படுகிறது. உடனடியாக, சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து சரி செய்யப்படுகிறது. இச்சேவையை பயன்படுத்தாமல், பல கிலோ மீட்டர் தூரம் கடந்து, பிரிவு அலுவலகங்களிலும், பழைய முறையில் ரெஜிஸ்டரை தேடும் மின் நுகர்வோர் உள்ளதாகவும், சராசரியாக தினமும் 30 பேர் மட்டுமே இம்மையத்தை பயன்படுத்துவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் வேதனையோடு தெரிவித்தனர்."எஸ்.எம்.எஸ்., அலார்ட்'மின் கட்டணம் ரீடிங் எடுத்ததும், 

கட்டணம் எவ்வளவு, செலுத்த வேண்டிய தொகை, கடைசி தேதி குறித்து அலார்ட் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் இலவச சேவையும் துவக்கப்பட்டுள்ளது. இதில், 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் மொபைல்போன் எண்ணை பதிவு செய்தால், "அலார்ட்' எஸ்.எம்.எஸ்., தேடி வரும். இம்முறை அறிமுகப்படுத்தி, இரண்டு மாதங்களாகி விட்டன. இதுவரை, 50 ஆயிரம் இணைப்புதாரர்களே பதிவு செய்துள்ளனர்.மொபைல் போன் எண்ணை, தேவையானபோது மாற்றிக்கொள்ளலாம். ஒரு இணைப்புக்கு எத்தனை முறை வேண்டு மானாலும், மொபைல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளலாம் எனவும், நேரில் வர முடியாதவர்கள் மின் தடை நீக்கும் மையத்துக்கான எண்களில் அழைத்தும் பதிவு செய்து கொள்ளலாம், என, மின்வாரிய அதிகாரிகள் தற்போது அறிவித்துள்ளனர்.பணம் செலுத்தும் வசதிபோஸ்ட் ஆபீஸ், சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிகளில் மின் கட்டணம் செலுத்தும் வசதியும், இன்டர்நெட் மூலம் செலுத்தும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிகளில் மின் இணைப்பு எண்ணை தெரிவித்தால் பணம் பெற்றுக்கொள்வர். ஆனால், இம்முறையை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.

மின்வாரிய கோட்ட பொறியாளர் 
சுப்ரமணியம் கூறுகையில், ""தற்போது, தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அனைவரது கையிலும் மொபைல்போன் உள்ளது. மின் துண்டிப்புக்கு அலையாமல், ஒரு போன் செய்தால் போதும். மின் கட்டண விவரம், கடைசி தேதி குறித்து அலார்ட் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவையில், 50 ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களாக இருந்தாலும், கொடுக்கலாம். மொபைல்போன் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இன்டர்நெட் மற்றும் வங்கிகளில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது,'' என்றார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click