மின்வாரிய ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வேண்டும்: தமிழக அரசுக்கு தொ.மு.ச. கோரிக்கை ( மாலை மலர் )

சென்னை, 
மின் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மின்சார வாரியத்தில் பணியாற்றும் 80 ஆயிரம் தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு 1–12–2011–ந்தேதி முதல் வாரியம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். இது தொடர்பாக 16–12–2011 அன்று வாரிய இயக்குனர் ராஜகோபால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 3 முறை அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த குழு ஊதிய உயர்வை பற்றி ஆராயாமல் தொழிலாளர்களின் பணிச்சுமையை 40 சதவீதம் உயர்த்தியது. இதற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நேரமானது 20 சதவீதம் குறைக்கப்பட்டது.
மேலும் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளித்தும் 15 ஆண்டு முடிந்தவர்களுக்கு 1 ஆண்டு உயர்வாக 3 சதவீதம் உயர்வும் வழங்கவும் அந்த குழு கூறியது.
இதை தொ.மு.ச. மட்டு மல்லாது பண்டக சாலை பணியாளர் சங்கம், ஊர்தி ஓட்டனர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஏற்கமாட்டோம் என அறிவித்து விட்டன.
2007–ம் ஆண்டு கருணாநிதி முதல்– அமைச்சராக இருந்த போது 40 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியதுடன் 15 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு 1 ஆண்டு உயர்வு வழங்கினார்.
முதல்– அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2005–ம் ஆண்டு ஊதிய உயர்வாக 6 சதவீதம் வழங்கினார்.
8 ஆண்டுகள் கழித்து இப்போது 5 சதவீதம் ஊதிய உயர்வு என்று அறிவிப்பது வருந்தத்தக்கது. இதை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஏற்காது. ஒரு நியாயமான ஊதிய உயர்வை வாங்கிட வேண்டும்.
எனவே மின் வாரியம் உடனடியாக வழங்க உள்ள 5 சதவீதத்தை உயர்த்தி அனைவரும் ஏற்கும் வகையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வரும் 31–12–13ம் தேதிக்குள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும்.
இவ்வாறு சிங்கார ரத்தின சபாபதி கூறி உள்ளார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click