மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HELPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம் திருப்பூர் கலெக்டர் மதிவாணன் அறிக்கை


திருப்பூர் :"மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HELPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம்,' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கலெக்டர் மதிவாணன் அறிக்கை:

மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட, எலக்ட்ரீசியன் ஒயர்மேன் பணியிடத்துக்கான பதிவுதாரர்களை, வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள், 11ம் முதல் (இன்று) 13ம் தேதிக்குள் நேரில் வந்து பட்டியலை உறுதி செய்து கொள்ளலாம்.

எலக்ட்ரீசியன் ஒயர்மேன் பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, என்.டி.சி., (எலக்ட்ரீசியன்), என்.டி.சி.,(ஒயர்மேன்) பயிற்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள், பி.சி., - எம்.பி.சி., பிரிவினர் 32 வயதுக்குள், ஓ.சி., பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். என்.ஏ.சி., பதிவு செய்துள்ளவர்களுக்கு, வயது உச்ச வரம்பில் ஓராண்டு சலுகை கிடைக்கும்.

கடந்த 2001 ஜூன் மாதம் பதிவு செய்த எஸ்.சி., - பி.சி., - எம்.பி.சி., மற்றும் ஓ.சி., பிரிவினரும், 2004ம் ஆண்டு டிச., மாதம் பதிவு செய்த பி.சி., முஸ்லிம் பிரிவினரும், 2007ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்த எஸ்.டி., பிரிவினரும், 2008ம் ஆண்டு டிச., எஸ்.சி., அருந்ததியர் பிரிவினரும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

கலப்பு மணம் புரிந்தவர்கள், ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், இலங்கை அகதிகளாக உள்ளவர்கள் முன்னுரிமை பெற்றவர்கள்.
இவ்வாறு, கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click