திருப்பூர்: மின்வாரியம் சாராத பணியாளர்களை, மின் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, என மின்வாரியம் எச்சரித்துள்ளது.


திருப்பூர்: மின்வாரியம் சாராத பணியாளர்களை, மின் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது, என மின்வாரியம் எச்சரித்துள்ளது. 

            திருப்பூரில், மின் வாரியத்தில் கணக்கில் வராத ஊழியர்கள் பலர் பணியில் இருப்பதும், அவர்கள் பணியில் ஈடு பட்டிருக்கும் போது, விபத்து ஏற்பட்டு பலியாகி வருவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இறந்தவருக்காக இழப்பீடு கேட்டு போராட்டங்களும் நடக்கிறது. இதனால், மின்வாரியம் சாராத நபர்கள் எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது என மின்வாரியம் எச்சரித்துள்ளது.

        திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா வெளியிட்டுள்ள அறிக்கை : மின் கம்பங்களில் ஏறி ப்யூஸ் போடுதல், மின் பளு நீக்குதல் உள்ளிட்ட பிற மின்வாரியத்திற்குண்டான வேலைகளுக்கு மின்வாரியம் சாராத நபர்களை பயன்படுத்துவது குற்றமாகும். மேலும், மின் மாற்றியில் தாங்களாவே ப்யூஸ் போடுவதும் தவறான செயலாகும். இப்பணிகளுக்கு பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு உட்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தொடர்பு கொண்டு, வாரிய பணியாளர்கள் மூலமே மின் தடையை சரி செய்து கொள்ள வேண்டும். மின் வாரியம் சாராத நபர்களை இதுபோன்ற பணிகளுக்கு உட்படுத்தும் போது, அது, அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது. மின் வாரியம் சாராத நபர்களை வாரியப்பணிகளில் ஈடுபடுத்தி, அதனால் ஏற்படும் மின் விபத்துகளுக்கு மின்வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: