ITI Direct Recruitment from Employment Exchange News


:மின்வாரியத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் ஒயர்மேன் பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு துறை மூலம் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன.மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் டேவிட்ராஜா அபிஷேக ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:மின்வாரியத்தில் நிரப்பப்படும் எலக்ட்ரீசியன் மற்றும் ஒயர்மேன் பணியிடங்களுக்கு, திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு துறை மூலம் கீழ்க்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. நாளைக்குள் (ஆக. 3), தங்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை பதிவுதாரர்கள் நேரில் வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.எலக்ட்ரீசியன்: கல்வித்தகுதி - 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ., (எலக்ட்ரீசியன்) தேர்ச்சி. வயது வரம்பு - பி.சி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., (எம்) - 32. பொதுப்பிரிவு - 30. எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., (எ) - 35.ஒயர்மேன்: கல்வி தகுதி - 10ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ., (ஒயர்மேன்) தேர்ச்சி. வயது வரம்பு - பி.சி., - எம்.பி.சி., - 32. பொதுப்பிரிவு - 30. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., - 35. உத்தேச பதிவு மூப்பு (மாநில அளவில்), பொதுப்பிரிவினர் (முன்னுரிமை இல்லாதோர்) பி.சி., - எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., 2001, டிச., 26. பி.சி., (எம்) - 2005, ஜூன் 28. எஸ்.சி., (எ) - 2012, ஜன., 27. எஸ்.டி., - 2008 அக்., 10. பெண்கள்: முன்னுரிமை இல்லாதோர் - பி.சி.,- எம்.பி.சி., மற்றும் எஸ்.சி., - 2012, ஜூலை 13. முன்னுரிமை பெற்ற, ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர், குடும்பத்தார் ஆகியோருக்கு, 2012, ஜூலை 30 வரை பதிவு செய்தோர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: