டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

திருப்பூர் : "பியூஸ்' போட, டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஒருவர், மின்சாரம் தாக்கி இறந்தார்.திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ளது பவானி நகர். இங்கு நேற்றிரவு 8.00 மணியளவில் "பியூஸ்' போட, அப்பகுதியை சேர்ந்த ஞானவேல், 43; என்பவர், (இவர், மின்வாரிய ஊழியர்களுக்கு உதவியாக இருந்து வந்தவர்) டிரான்ஸ்பார்மரை "ஆப்' செய்துள்ளார். அப்போது, மூன்று மின் இணைப்புகளில் இரண்டில் மட்டுமே மின் சப்ளை தடையாகியுள்ளது; ஒரு இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இதை அறியாத ஞானவேல் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி, மின் கம்பியை தொட்டுள்ளார். உயரழுத்த மின்சாரம் பாய்ந்து, கால் கருகி துண்டித்த நிலையில், அங்கேயே பிணமாக தொங்கினார்.இதைப் பார்த்த மக்கள் தீயணைப்பு துறை, திருப்பூர் வடக்கு போலீசார், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை முழுமையாக துண்டித்த பிறகு, தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஆகியோர், டிரான்ஸ்பார்மரில் இருந்த ஞானவேலின் உடலை கீழே இறக்கினர். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, "ஞானவேல் மின்வாரிய ஊழியர் அல்ல. இவர் எதற்காக டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார் என்று விசாரித்த பிறகே, சரியான தகவல் கூறமுடியும்,' என்றனர்.

1 comment:

krishnamoorthymoorthy said...

Minsara tholilali,athilum oppandha tholilali,kalaiyil velaikkupponal thirumbi malaiyil n enbatharkku uthiravatham
UNDA????EB officerkal Udan povor solla mudiyum??...Ematrum tamilnadu Govt..umm..TNEB..umm.. accident ill.IRANDHU pona.. Tholarin nilayinai ninaithupparkkuma..OPPandha tholilalikalae neengal uooaiyaga iruppathal than..Govt.play seikirathu..???KRISHNAMOORTHY,CITU,GOBI.