புதிய இணைப்புக்கான மின்மீட்டர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்


 புதிய மின் இணைப்பு பெற மின் மீட்டரை நுகர்வோர்களே வாங்கி கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் சி.குண சேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் சி.குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதிய மின் இணைப்பு பெறும் மின் நுகர்வோர்கள் தாங்களே மின் மீட்டரையும் விலைக்கு வாங்கி கொடுக் கும் நடைமுறையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. *2003ஆம் ஆண்டு மின்சார சட்டத் தின்படி மின்பகிர்மான நிறுவனம் மின் நுகர்வோர்களிடம் இருந்து உரிய பிணைய வைப்புத் தொகையை பெற்றுக் கொண்டு மின் மீட்டரை வழங்கவேண்டும்.
*மின் நுகர்வோர் தாங்களே மின் மீட்டரை விலைக்கு வாங்கிக்கொடுக்கும் உரிமையும் உள்ளது. இத்தகைய சம யங்களில் மின் மீட்டருக்கான பிணைய வைப்புத்தொகை தேவையில்லை. மின் உற்பத்தியாளர்கள் வாங்கி வரும் மின் மீட்டரை மின்சாரவாரியம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தபடியாலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்மீட்டரை உடன் வழங்கக்கூடிய நிலையில் இல்லாமல் இருந்தபடியாலும், 2003ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின்படி மின்நுகர்வோர் தாங்களே தம்முடைய மின் மீட்டரை விலைக்கு வாங்கத்தயாராக இருக்கையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகம் அந்த மின் மீட்டரை ஏற்றுக்கொள்ளுமாறு ஆணை பிறப்பிக் கப்பட்டது. ஆணையம் அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால் மின் நுகர்வோர் தாங்களே மின் மீட்டரை விலைக்கு வாங்கிக்கொடுக்கும் உரிமையை தேர்வு செய்வார்களானால், மின்சார வாரியம் வழிகாட்டு தலின்படி அவர்கள் மின் மீட்டரை விலைக்கு வாங்கிக் கொடுக்கலாம்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் புதிய மின்இணைப்பு மற்றும் மின் மீட்டரை மாற்றி வைத்தல் முதலியவற்றுக்கு மின் மீட்டரை வழங்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படவில்லை. மின்சார வாரியம் ஒரு முனை மற்றும் மும்முனை மின் மீட்டர்களை தாங்களே விலைக்கு வாங்குவதற்காக கொள்முதல் ஆணைகள் சமீபத்தில் வெளியிட்டுள்ளபடியால் மின் மீட்டர் வழங்கும் நிலைமை சீராகும் என ஆணையம் எதிர்பார்க்கிறது.- இவ்வாறு சி.குணசேகரன் கூறியுள்ளார்.

1 comment:

balasankar said...

குழப்பமான முடிவு