24houres computerized fuse off call register in tirupur

திருப்பூர் : திருப்பூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், மின்தடை தொடர்பாக, எந்
நேரமும் புகார் செய்யலாம்.திருப்பூர் கோட்ட மின் வாரியத்துக்கு உட்பட்ட 31 பிரிவு அலுவலகங்களில் 2.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் ஏற்படும் மின் தடை தொடர்பாக எந்நேரமும் பொதுமக்கள் புகார் செய்யும் வகையிலும், உடனுக்குடன் சரி செய்யும் வகையிலும், "கம்ப்யூட்டரைஸ்டு' மின் தடை நீக்கும் மையம், குமார் நகர் அலுவலகத்தில் நேற்று துவக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல்., போன் மற்றும் மொபைல் போன் மூலம் 155 333 என்ற 
எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், 0421 - 2259 100; 94458 58778 ; 94458 58779; 94458 58780 ஆகிய எண்களுக்கும் அழைத்து புகார் செய்யலாம். மின் தடையை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகார் தெரிவிப்பவர்கள், மின் இணைப்பின் 10 இலக்க எண்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது:திருப்பூர் மாகராட்சிக்கு உட்பட்ட பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், பிரிட்ஜ்வே காலனி, வீரபாண்டி பிரிவு, ஆண்டிபாளையம், முதலிபாளையம், நல் லூர், சிட்கோ உள்ளிட்ட 31 பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம்.புகார் தெரிவிக்க, 10 இலக்க மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டும். தனியார் மின் இணைப்புகளை பொருத்தவரை, பகல் நேரங்
களில் புகார் பெறப்பட்டால், உடனுக்குடன் சரி செய்யப்
படும். மாலை 6.00 மணிக்கு மேல் புகார் பதிவு செய்தால், மறுநாள் காலை 9.00 
மணிக்குள் சரி செய்யப்படும்.
ஒரு பகுதி முழுவதும் மின் தடை, "டிரான்ஸ்பார்மர்' பழுது, மின் ஒயர் அறுந்து விழுதல் உள்ளிட்ட அனைத்து மின் தடை பிரச்னைகள் குறித்தும் புகார் வந்தால், இரவு, பகல் என எந்த நேரமாக இருந்தாலும், உடனுக்குடன் சரி செய்யப்படும், என்றார்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...