மின் கட்டணம் குறிப்பிடாததால் குழப்பம்


திருப்பூர்: மின்சார பயன்பாட்டை கணக்கீடு செய்யும் ஊழியர்கள், மின்கட்டண தொகையை தெரிவிக்காததால், நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர். புதிய கட்டணம் உயர்வுகுறித்த, சாப்ட்வேர் சிஸ்டம் முழுமை அடைந்த பின்பே, கட்டணம் தெரியவரும்என மின் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு குறித்து கணக்கீடுசெய்யப்படுகிறது யூனிட் அடிப்படையில், மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இம்மாதம் 1ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, திருப்பூரில் பல்வேறு பகுதிகளில், இரு மாத மின்சாரபயன்பாடு குறித்த கணக்கீட்டில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.மின்கணக்கீடு செய்யும்போது, யூனிட் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அதற்குரியகட்டணத்தை மின்வாரிய அட்டையில் எழுதி தருவது வழக்கம். அத் தொகையைமின்நுகர்வோர் செலுத்துவர். இம்முறை யூனிட் எண்ணிக்கையை மட்டுமே எழுதிகொடுக்கின்றனர்; கட்டணம் குறித்து தெரிவிக்க மறுக்கின்றனர். 

மின்வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அல்லது பிரவுசிங் சென்டருக்குசென்றோ, மின்கட்டண தொகையை தெரிந்து கொள்ளுமாறு பதிலளிக்கின்றனர். இதனால்,மின்நுகர்வோர் குழப்பம் அடைகின்றனர்.
இம்மாதம் 1ம் தேதியே புதிய மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்தஒன்றரை மாதமாக பயன்படுத்திய மின்சாரத்துக்கும் தற்போதைய உயர்வு பொருந்துமாஎன்ற சந்தேகம் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளது. பிரவுசிங் சென்டருக்கு சென்றாலும், மின்தடை காரணமாக, கட்டணவிவரத்தை அறிய முடிவதில்லை. மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தாலும், சரியாக பதில் சொல்வதில்லை என நுகர்வோர் புலம்புகின்றனர். 
திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதாவிடம் கேட்டபோது, புதிதாக உயர்த்தப்பட்ட மின்கட்டண அடிப்படையில், கம்ப்யூட்டரில்சாப்ட்வேர் ஏற்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது; இன்னும் முழுமைஅடையவில்லை. பணி முடிந்தபின், தற்போதைய மின் பயன்பாடு யூனிட் மட்டும் அதில்சேர்க்கப்பட்டால், புதிய கட்டண உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் செலுத்தவேண்டிய கட்டணம் தெரியவரும்.
கடந்த முறை மின்சார பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு அடிப்படையில், மார்ச்31 வரை மின்சார பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும், இம்மாதம் 1ம் தேதி முதல்,கணக்கீடு செய்த நாள் வரைக்கும் கணக்கீடு செய்து, கட்டணம் வசூலிக்கப்படும்.எனவே, கடந்த மாத மின் பயன்பாட்டுக்கு பழைய கட்டணமும், இம்மாதம் 1ம் தேதிமுதல் பயன்படுத்திய மின்சாரத்துக்கு உயர்த்தப்பட்ட கட்டணமும்வசூலிக்கப்படும்,என்றார்.

NEWS தினமலர் 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click