கடந்த மாதம் 30-ந்தேதி மின் கட்டண உயர்வை தமிழக மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. ஏப்.1-ந்தேதி முதல் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1.10 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ. 1.80 பைசாவும், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 பைசாவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு 5 ரூபாய் 75 பைசாவாக உயர்ந்தது.
இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. அரசியல் கட்சிகள் போராட்டங்களும் அறிவித்தன. இதனைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மின் கட்டணத்தை குறைத்து பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதில், 100 யூனிட் வரை உபயோகப் படுத்துபவர்களுக்கு ரூ.1.00 ஆகவும், 200 யூனிட் வரை உபயோகப் படுத்துபவர்களுக்கு ரூ. 1.50 பைசாகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகப் படுத்துபவர்களுக்கு, முதல் 200 யூனிட் வரை ரூ. 2 ஆகவும், 201 முதல் 500 யூனிட் வரை 3 ஆகவும் குறைத்து ஜெயலலிதா அறிவித்தார்.
இதனால், மின்சார வாரியத்திற்கு ரூ.740 கோடி வரை செலவாகும். இதனை அரசு மானியமாக வழங்கும் எனவும் பேரவையில் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment