எந்தக் கேள்வி சரி


மின்சாரம் என்பதன் சரியான அர்த்தம்:-

மின்சாரம் என்பது ஒரேநேரத்தில் மெதுவாகவும்,வேகமாகவும் செல்லும் என்பதல்ல. அதெபோல் அது ஒரெ நேரத்தில் கண்னுக்கு தெரிவதும் தெரியாததும் அல்ல. இந்தக் குழப்பதிற்கெல்லாம் காரணம் தோராயமாக ஒரு பத்து விதமான தத்துவங்களுக்கு பொதுவாக மின்சாரம் என்ற பெயரைக் கொடுத்துவிட்டார்கள் நமது அறிவியலாளர்கள். மின்சாரம் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை. "ELECTRICITY DOES NOT EXIST". இந்த பிராங்க்ளின்,எடிசன், தாம்சன் மற்றும் பல அறிவியல் ஆசிரியர்களும் நம்ம ஊரு ராஜாக்களோட ரொம்ம்ப நேரம் பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்காங்க போல இருக்கு. எப்படி நம்ம 23ம் புலிகேசியோட அப்பா ராஜா தனக்கு பிறந்த 23 குழந்தைகளுக்கும் புலிகேசினு பேரு வச்சாரோ அதேமாதிரி அவங்களும் தாங்கள் கண்டுபிடித்த பல அறிவியல் கோட்பாடுகளுக்கு சும்மா மின்சாரம்னு ஒரே பேர வச்சிட்டாங்க.

இதேபோல வெளிநாட்டுல கூட மிஸஸ் மெக்கேவ் அப்படிங்கற ஒரு அம்மா தனக்கு பிறந்த 23 பசங்களுக்கும் டேவ் அப்படினு பேரு வச்சாங்களாம். இந்த ரெண்டுபேரயும் பாத்து நம்ம விஞ்ஞானிகளும் ஒரே பேரா வச்சிட்டாங்க.
அதனால எப்பேல்லாம் நாம "மின்சாரம்னா என்ன?" அப்படினு கேட்கிரோமோ அது 23ம் புலிகேசியோட அப்பாகிட்ட போயி உங்க பிள்ளைகளில் யாரு புலிகேசி? இல்லனா மிஸஸ் மெக்கேவ் கிட்ட போயி "யாரு டேவ்?" அப்படினு கேட்கறதுக்கு சமம். அவங்க எப்படி பதில் சொல்லுவாங்க? எப்படி விளக்கம் குடுப்பாங்க?. இந்தகேள்விக்கு பதிலே இல்ல. எனேன்றால் நமது கேள்வியே தப்பு. யாரு புலிகேசி? இல்ல யாரு டேவ்? என்பது தவறான கேள்வி. எப்படினு கேக்கறீங்களா? நாம் ஒரே ஒரு புலிகேசி அல்லது ஒரே ஒரு டேவ் இருக்கறதா நினச்சிட்டு யாரு புலிகேசினு கேட்கிறோம். ஆனா அங்க 23 பேர் இருக்காங்க!. ஒரே பேர்ல.அப்ப இந்த கேள்விக்கு என்ன பதில்?. இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்க்கு முன்னால் நம்முடையா ஒரே ஒரு புலிகேசிதான் இருக்கார்னு நினச்சிகிட்டு இருகிற தவறான புரிதலை சரிசெய்ய வேண்டும். அவங்க 23 பேருக்கும் ஒரே பேருதான் என தெறிந்து விட்டால் யாரு புலிகேசி என கேட்பதில் அர்த்தமே இல்லை.

அதே போல்தான் மின்சாரமும் பல அடிப்படைத்தத்துவங்களுகு ஒரே பெயரை வைத்து விட்டார்கள். இப்ப யாரு டேவ்னு கேட்டா? இதே இவனும் டேவ்தான் , அதோ அவனும் டேவ்தான், இன்னொருத்தனும் டேவ்தான்னு பதில் வரும். எல்லாமே சரியானதுதானே எல்லாருக்கும் ஒரே பேராக இருக்கும் போது. அப்ப ஒருத்தன பத்தி சரியா தெரிஞ்சுக்கனும்னா எப்படி கேள்வி கேட்கனும்? யாரு முதல்ல பிறந்த டேவ்? யாரு குட்டை டேவ்? யாரு குண்டு டேவ் ? இப்படிக்கேட்டால் கேள்வியும் சரி. தேவையான பதிலும் கிடைக்கும்.

எனவேதான் நாம் ஒரே ஒரு பதிலை மின்சாரம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு கண்டுபிடிக்க முடியாது. எனேனில் கேள்வியே தவறு. முதலில் நாம் உணர வேண்டும் மின்சாரம் என்ற பேர் கொண்ட ஒன்று இல்லை.மின்சாரம் என்ற ஒரு தனியான ஒன்று இல்லவே இல்லை. ஒரு கடத்தியில்(wire) பல பொருள்கள் இருக்கும் போது, மக்கள் தவறாக எல்லாவற்றுக்கும் மின்சாரம் என்ற ஒரே பெயரில் அழைக்கத்தொடங்கி விட்டார்கள்.

அதனால், எப்பொழுதும் மின்சாரம் என்றால் என்ன? என்று எப்பொழுதும் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக அந்த வார்த்தையையே விட்டு விடுங்கள், சரியான பெயரைப் பயன்படுத்துங்கள். எப்படி? இதோ சில உங்களுக்காக

மின்னூட்டம்(electric charge) என்றால் என்ன?
மின்திறன்(electrical energy என்றால் என்ன?
எலக்ட்ரான்(electron) என்றால் என்ன?
மின்னோட்டம்(electric current) என்றால் என்ன?
மின்னூட்ட வேறுபாடு(inbalanced charge) என்றால் என்ன?
மின்புலம்(electric field) என்றால் என்ன?
மின்னழுத்தம்(electric potential) என்றால் என்ன?
மின்ஆற்றல்(electric power) என்றால் என்ன?
மின்காந்தவியல்(electromagnetism) என்றால் என்ன?
மின்னியல்(electrical science) என்றால் என்ன?
மின்னியல் அடிப்படைக்கூறுகள்(electrical phenomena) என்ன?
மின்னியக்கம்(electrodynamics) என்றால் என்ன?

மேலே உள்ள கேள்விகளுக்கு எல்லாம் சரியான பதில்கள உள்ளன. ஆனால் நீங்க மின்சாரம்னா என்னனு கேட்டா?, அப்புறம் விசு சொல்ற மாதிரி சம்சாரம் அது மின்சாரம்னு ஒரு குழப்பமான பதிலைத்தான் சொல்ல முடியும். அப்புரம் நீங்கள் கேள்விக்கு பதில தேடீட்டே இருக்கனும்.சரியான பதில் தேடினாலும் கிடைக்காது.
ஒகேவா? இனிமேல் நண்பர்களே சரியான கேள்வி கேளுங்க மிகச்சரியான பதிலைப்பெறுங்கள்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click