ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்

தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் பணி விதிகள் - 41A, 41A(a), 41A(b) - ஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதம் கொடுத்த பின்னர், அந்த கடிதத்தை பணிச்சுமை காரணமாக கொடுத்துவிட்டதாக கூறி 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்து மீண்டும் பணியில் சேரலாம்.தமிழ்நாடு சார்நிலை பணியாளர்கள் விதிகள் விதி 41A ன்படி பணி விலகல் கடிதம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ள நிலையில் ஒரு அரசு பணியாளர் கொடுக்கும் விலகல் கடிதத்தை உடனே உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள கூடாது. ஆனால் உயர் அதிகாரிகள் விதி 41(b)யின்படி ஒரு அரசு ஊழியர் விலகல் கடிதத்தை கொடுத்து அது ஏற்றுக் கொண்ட பிறகு அந்த கடிதத்தை அரசு ஊழியர் திரும்ப பெறவே முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. விதி 41A - மூன்று காரணிகளை உள்ளடக்கியது. (1)- 3 மாதங்களுக்கு குறைவில்லாமல் பணி விலகல் குறித்து ஓர் அறிவிப்பை கொடுக்க வேண்டும். (2)- அதனை வேலை அளித்த அதிகாரமுடைய நபர் ஏற்றுக் கொள்ள வேண்டும். (3)- அளிக்கப்பட்ட பணி விலகல் அறிவிப்பை திரும்ப பெறுதல் அறிவிப்பு குறித்து விதி 41A(a) ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்வது குறித்து தகுதி பெற்ற அதிகாரி குறிப்பிட்ட காலஅவகாசம் அளித்து, அந்த பணி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டது குறித்து அல்லது நிராகரித்தது குறித்து காரணங்களை குறிப்பிட்டு ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகாரம் பெற்ற நபர் பணி விலகல் குறித்து எந்தவொரு உத்தரவையும் அறிவிப்பு காலத்திற்குள் பிறப்பிக்க வில்லை என்றால் விதி 41A(c) ன்படி அந்த பணி விலகல் கடிதம் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். பணி விலகல் குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டதற்கு பின்னர், அந்த பணி விலகல் அறிவிப்பின் மீது ஓர் உத்தரவினை பிறப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அது தன்னுடைய பணியை விட்டு விலகுவதாக அறிவிப்பு கொடுத்த அரசு ஊழியரை பாதிக்காது, எனவே ஒரு அரசு ஊழியர் பணியை விட்டு விலகுவதாக ஒரு கடிதத்தை கொடுத்த பின்னர் 90 நாட்களுக்குள் அந்த கடிதத்தை திரும்ப பெற மனு கொடுத்தால் அந்த அரசு ஊழியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.


W. P. NO - 19361/2014 DT - 16.06.2016, G. Parameshwari Vs Register, Chennai high Court and Others (2016-5-CTC-161)


No comments: